Shine Tom Chacko : பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, தமிழில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மலையாள திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. மலையாளத்தில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் அங்குள்ள மக்களிடம் பிரச்சனை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் தல்லுமலா. இப்படத்தில் ஷைன் டாம் சாக்கோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள கலமச்சேரி பகுதியில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்புக்காக வந்த நடிகர்கள் தங்கள் வாகனத்தை ரோட்டோரம் நிறுத்திவிட்டு சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் படக்குழுவினர் குப்பைகளை ரோட்டோரம் வீசிவிட்டு சென்றதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்துள்ளனர்.
இதனை படக்குழுவினர் மதிக்காமல் தொடர்ந்து செய்து வந்ததால், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அதனை தட்டிக்கேட்க படப்பிடிப்பு நடைபெறும் இடத்துக்கே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி உள்ளது. இதில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ தாக்கியதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
undefined
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் இருதரப்பினரையும் பேசி சமாதானப்படுத்தி உள்ளனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் ஷைன் டாம் சாக்கோ தாக்கியதில் காயமடைந்த ஷமீர் என்ற நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக யாரும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நடிகர் ஷைன் டாம் சாக்கோ தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Malavika Mohanan about Dhanush : எல்லாத்துக்கும் காரணம் தனுஷ் தான்.... மறைக்காமல் உண்மையை சொன்ன மாளவிகா மோகனன்