வேலையில்லாதவர்கள் எனக்கு கல்யாணம்ன்னு வதந்தியை பரப்பி விடுறாங்க... வரலட்சுமி காட்டம்!

Published : Jan 01, 2019, 12:34 PM IST
வேலையில்லாதவர்கள் எனக்கு கல்யாணம்ன்னு வதந்தியை பரப்பி விடுறாங்க... வரலட்சுமி காட்டம்!

சுருக்கம்

சிம்பு ஜோடியாக ''போடா போடி'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். தாரை தப்பட்டை உள்ளிட்ட படங்களின் மூலம் கவனத்தைப்பெற்றார். இதனைத் தொடர்ந்து சண்டக்கோழி 2, சர்கார் படங்களில் வில்லியாகவும் நடித்தார். 

விஷாலும் வரலட்சுமியும் காதலிப்பதாக கோலிவுட்டில் கிசுகிசு கடந்த சில வருடங்களாகவே இருந்து வந்தது. தொடக்கத்தில்  வாய் திறக்காத  வரலட்சுமி,  கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விளக்கம் அளித்தார்.

அதில், விஷால் எனக்கு நெருக்கமான நண்பர். எல்லா வி‌ஷயங்களையும் இருவரும் பகிர்ந்து கொள்வோம். ஆனால் அவரும் நானும் காதலிப்பதாகவோ, டேட்டிங் செல்வதாகவோ  சொல்வதெல்லாம் பொய்.

விஷாலுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்தால் நானே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க தயார். அவர் திருமணம் செய்தால் மகிழ்ச்சியடையப் போவதும் நான்தான். எதற்காக விஷாலுடன் என்னை இணைத்து பேசுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்பு  விஷால் அப்பா பிரபல நாளிதழுக்கு கொடுத்த பேட்டியில் இவருக்கும் ஆந்திர பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் ஆன தகவலை அறிவித்துள்ளார். இதனையடுத்து வரலட்சுமியை விஷால் ஏமாற்றிவிட்டாரா? என சமூகவலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டதால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்ட வரலட்சுமி, எப்போதும் போல வருடத்தின் இறுதியில் வேலையில்லாத சிலர் எனக்கு திருமணம் என்ற வதந்தியை பரப்பி வருகிறார்கள். 

நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. நான் சினிமாவில் தான் கவனம் செலுத்தப் போகிறேன். அடுத்த ஆண்டு பார்க்கலாம். வதந்தியை பரப்புவது யார் என்று எனக்கு தெரியும் என பதிவிட்டு விஷால் உடனான  காதல் கிசுகிசுக்ககளும் முடிவுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!