
பிரபாஸுடன் விரைவில் திருமணம், குடும்பங்களுக்குள் பேச்சு வார்த்தை தீவிரம் என்று செய்திகள் வந்துகொண்டிருக்க, தேசிய விருது வாங்கும் எண்ணத்தில் ஒரு பெரும் சவாலான பாத்திரத்தில் நடிக்கத் தயாராகிவருகிறார் அனுஷ்கா.
‘பாகுமதி’படத்துக்குப் பின்னர் அனுஷ்கா புதிய படங்களில் அதிகம் ஒப்பந்தமாகாமல் தவிர்த்துவந்தார். அவர் உடலில் ஏற்பட்ட ஒரு ரசாயன மாற்றம் காரணமாக குண்டாகிவிட்டார். அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார் என்றும் இல்லையில்லை பிரபாஸுடன் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது அதனால் திரையுலகை விட்டு ஒதுங்குகிறார் என்றும் தகவல்கள் நடமாடின. இத்தகவல்கள் எதையும் அனுஷ்கா மறுக்கவில்லை.
இந்நிலையில் அனுஷ்காவுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றுத்தருவது மட்டுமே இப்படத்தின் குறிக்கோள் என்ற அறிவிப்புடன் பிரபல தெலுங்குப் பட இயக்குநர் கோனா வெங்கட் ஒரு புதிய படத்தைத் துவக்குகிறார். ‘சைலன்ஸ்’ என்று பெயரிடப்பட உள்ள இப்படத்தில் அனுஷ்கா பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார் என்பது ஒரு சர்ப்ரைஸ் மற்றும் பகீர் தகவல்.
பிப்ரவரியில் துவங்கவுள்ள இப்படம் ‘பாகுபலி’, ‘பாகுமதி’ போன்ற பிரம்மாண்டமான படமாக இருக்குமென்றும், இதில் அனுஷ்காவுடன் முன்னணி ஹாலிவுட் நடிகர்கள் சிலர் நடிக்கவிருப்பதாகவும் கோனா வெங்கட் தெரிவிக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.