"அந்தக் குழந்தையே புஷ்பா தான் சார்..!" இணையத்தை கலக்கும் குட்டி புஷ்பா வீடியோ..!!

Anija Kannan   | Asianet News
Published : Mar 11, 2022, 12:03 PM ISTUpdated : Mar 11, 2022, 12:34 PM IST
"அந்தக் குழந்தையே புஷ்பா தான் சார்..!" இணையத்தை கலக்கும் குட்டி புஷ்பா வீடியோ..!!

சுருக்கம்

Pushpa song: புஷ்பா பட பாடலுக்கு, அல்லு அர்ஜுனை போன்று தாடியைக் கோதும்...பச்சிளங் குழந்தையின் வீடியோ ஒன்று  இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது. 

அல்லு அர்ஜுன் (Allu Arjun) மற்றும் ராஷ்மிகா நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் 'புஷ்பா'.  இப்படம் திரைக்கு வந்து பல மாதங்கள் ஆனபோதிலும், இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் யாவும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டது.  

இப்படத்திலுள்ள 'ஊ சொல்றியா மாமா, சாமி சாமி, ஸ்ரீவல்லி' போன்ற பாடல்கள் ரசிகர்கள் இணையத்தில் ஹிட் அடித்தன. இந்த பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பரவ, இந்த பாடல்களுக்கு சிறுவர் தொடக்கி, பெரியவர்கள் வரை என அனைவரும் நடனமாடி அதனை ட்ரெண்ட் செய்து வந்தனர். 

'புஷ்பா' ஃபீவர்:

இன்றளவும், இதன் மவுசு குறையாமல், ஊரே 'புஷ்பா' ஃபீவர் பிடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே போல, புஷ்பா பட ஸ்ரீ வள்ளி பாடல் ஒன்றுக்கு நடிகர் அல்லு அர்ஜுன் தாடியை கோதி வசனம் பேசும் ஸ்டைலும், தோளைத் தூக்கி நடக்கும் விஷயங்களும் உலகளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது. 

இதனை பலரும் சேலஞ்சாக எடுத்துக்கொண்டு நடனமாடி வருகின்றனர். மேலும், விராட் கோலி, பிராவோ உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்கள் கூட, அல்லு அர்ஜுனை போல தாடி கோதும் ஸ்டைலை மைதானங்களில் செய்து காட்டி வீடியோ வெளியிட்டு இணையவாசிகளை வெகுவாக கவர்ந்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் பச்சிளங் குழந்தையின் வீடியோ ஒன்று  இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது. 

பச்சிளம் குழந்தையின் வீடியோ:

அதன் வீடியோவில், பிறந்த சில மணி நேரம் கழித்த, பச்சிளம் குழந்தை ஒன்று ஒரு சிறிய புன்னகையுடன், தனது தாடையைத் தடவுகிறது. அது பார்ப்பதற்கு, அப்படியே அல்லு அர்ஜுனின் தாடியைக் கோதுவது போலவே உள்ளது. மேலும், அந்த வீடியோவின் பின் பக்கத்தில், புஷ்பா படத்தின் வசனமும் இடம்பெறுகிறது. இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

 

 

நெட்டிசன்கள் கருத்து:

மேலும் படிக்க : ET movie: எதற்கும் துணிந்தவன் பட வெற்றியை கொண்டாடும் படக்குழு... ! புகைப்படத்துடன் நச்சுனு ட்வீட் போட்ட சூரி.!

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிலர் ஊரையே ஆட்டி படைக்கும், புஷ்பா'ஃபீவர் பச்சிளம் குழந்தையையும் விட்டு வைக்க வில்லையா என்று கிண்டலாக பதிவிட்டு உள்ளனர். இன்னும், சிலர் அல்லு அர்ஜுனின் புகழ் பரவட்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

சமந்தாவின் ஹனிமூன் பிளான்: ராஜ் உடன் ரொமான்டிக் டிரிப் எங்கே?
ஒரே ஆண்டில் 2 தோல்விகள் கொடுத்த பிரபாஸ்!