
எதற்கும் துணிந்தவன் படத்திற்கு, மக்கள் மத்தியில் கிடைத்திருக்கும் அமோக வரவேற்பை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் நடிகர் சூர்யாவின் கூட்டணியில் வெளிவந்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப என்டர்டைன்மென்ட், ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என பக்கா கமர்ஷியல் படமாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நேற்று இந்த திரைப்படம் தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. முதல் நாளே ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. இந்த படத்தில், சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும், சூரி, வினய் ராய், புகழ், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சூர்யாவின் மஸான என்ட்ரி:
சூர்யாவின் மஸான என்ட்ரி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா நடிப்பில் திரையரங்கில் வெளியாகும் படம் எதற்கும் துணிந்தவன். கடைசியாக காப்பான் படம் 2019ம் ஆண்டு வெளியாகி இருந்தது. அதன்பிறகு சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்றபடங்கள் OTTயில் வெளியானது.
மக்கள் மத்தியில் கிடைத்திருக்கும் வரவேற்பு:
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.எனவே, இது நிச்சயம் பிளாக் பஸ்டர் படமாக அமையும் என பேமிலி ஆடியன்ஸ் கருத்து தெரிவித்துள்ளனர்.
கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு:
இந்நிலையில், முதல் நாளே எதற்கும் துணிந்தவன் படத்திற்கு ரசிகர்கள் அளித்துள்ள பிரம்மாண்ட வெற்றியை படக்குழுவினர் கேட் வெட்டி கொண்டாடி உள்ளனர். இந்த புகைப்படங்களை நடிகர் சூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்திற்கு கீழே சூரி,இன்றைய காலச்சூழலுக்கு, மிகவும் தேவையான கருத்துள்ள, தாய்மார்கள் கொண்டாடும் படத்தை தந்தமைக்கு அண்ணன் பாண்டிராஜிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
ஆம்பள பிள்ளைக அழகூடாது ன்னு மட்டும் சொல்லி வளர்த்தவுக , இனி பொம்பள பிள்ளைகள அழ வைக்க கூடாதுன்னு சொல்லி வளர்ப்பாங்க என்று குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்டுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும், பலரும் படம் சூப்பர் அண்ணா..! அருமையான கதை என்று படத்தை பாராட்டி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.