ET movie : முருகன் பாடலால் எதற்கும் துணிந்தவன் படத்துக்கு புது சிக்கல்... பாடலை தூக்கச் சொல்லி போலீஸில் புகார்

By Asianet Tamil cinema  |  First Published Mar 11, 2022, 6:58 AM IST

etharkkum thunindhavan movie : எதற்கும் துணிந்தவன் படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இப்படத்துக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டு உள்ளது. 


கொண்டாடப்படும் எதற்கும் துணிந்தவன்

சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசானது. தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளனர். குடும்ப செண்டிமெண்ட், ஆக்‌ஷன், காமெடி, ரொமான்ஸ் என பக்கா கமர்ஷியல் படமாக ரிலீசாக உள்ள இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

நட்சத்திர பட்டாளம்

பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும், வில்லனாக நடிகர் வினய்யும் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், தேவதர்ஷினி, சரண்யா பொன்வண்ணன், புகழ், சூரி, திவ்யா துரைசாமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

ஆக்‌ஷன் வேறலெவல்

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து உள்ளார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது ஸ்டண்ட் காட்சிகள் தான். அதன்படி இரட்டையர்களான ராம் லக்‌ஷ்மன் இப்படத்திற்கு ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றி உள்ளனர்.

போலீஸில் புகார்

எதற்கும் துணிந்தவன் படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இப்படத்துக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படத்தில் இடம்பெறும் முருகன் பாடல், தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்துவது போல் இருப்பதாகவும், ஆதலால் இப்பாடலை படத்தில் இருந்து நீக்கக் கோரியும் அகில இந்திய நேதாஜி கட்சியினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... Radhe shyam : இரண்டரை ஆண்டுகளுக்கு பின் ரிலீசான பிரபாஸ் படம்... ராதே ஷ்யாமை கொண்டாடும் ரசிகர்கள்

click me!