நான் வளர ரஜினி காரணமில்லை..தனுஷ் பேச்சால் அதிர்ந்த ரசிகர்கள்

Kanmani P   | Asianet News
Published : Mar 10, 2022, 10:19 PM ISTUpdated : Mar 10, 2022, 10:22 PM IST
நான் வளர ரஜினி காரணமில்லை..தனுஷ் பேச்சால் அதிர்ந்த ரசிகர்கள்

சுருக்கம்

ரஜினி தான் தனுஷின் வளர்ச்சிக்கு காரணம் என சொல்லப்பட்டு வருவதற்கு பதிலளித்துள்ள தனுஷ் ..என் அண்ணனும் , அப்பாவும் தான் என் வளர்ச்சிக்கு காரணம். ரஜினி மருமகன் என்பது அந்தஸ்தை தந்ததே தவிர என் வளர்ச்சிக்கு உதவவில்லை என அதிர்ச்சியாக பதிலளித்துள்ளார்.   

பிரபல நடிகர் தனுஷ் : 

இன்று முன்னணி நாயகர்களுக்கு குறிப்பிடத்தக்க இடத்தில் இருக்கும் தனுஷ் தன்னுடைய தந்தை கஸ்தூரிராஜா இயக்கத்தில் முதன்முறையாக துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தன படம் நல்ல வரவேற்பை ஈட்டி கொடுத்தது. இதையடுத்து  அண்ணன் செல்வராகவன்- தனுஷ் கூட்டணியில் வெளியாகும் படங்கள் மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு பெற்றது. சமீபத்தில் இருவரும் நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளிட்ட படைப்புகளில் இணைந்துள்ளனர்.

பான் வேர்ல்ட் நாயகனாக உயரும் தனுஷ் : 
 

தென் இந்திய மொழிகளில் கலக்கி வந்த தனுஷ் ஹாலிவுட்டை தொடர்ந்து வெளிநாட்டு படங்களிலும் தன்  திறமையை வெளிக்காட்டி வருகிறார். பேன் வேர்ல்ட் நாயகனாக உயர்ந்துள்ள தனுஷ் ஹாலிவுட்டில் கலாட்டா  கல்யாணத்தை தொடர்ந்து அமெரிக்க படமான க்ரே மேனில் நாயகனாக நடித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...ஐஸ்வர்யாவை பிரிய மனமின்றி தவிக்கும் தனுஷ்?.பாடலில் காதல் சோகம் சொன்ன மாறன்..    

சொந்த வாழ்க்கை கோளாறு :
படங்களில் வெற்றி கண்டாலும் சொந்த வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்தித்து வருகிறார் தனுஷ். நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதிகளின் விவாகரத்து முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. . ரஜினியின் மகள்  ஐஸ்வர்யாவின் பிரிவு பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது. குடும்பத்தாரின் அட்வைஸை மதிக்காமல் தங்களது முடிவிலிருந்து இருவரும் பின் வாங்குவதாக தெரியவில்லை..

ரஜினியின் கவலை :

ஏற்கனவே தனது இரண்டாவது மகலின் விவாகரத்து, மாரு மனம் என ஏகப்பட்ட சிக்கலில் இருந்து சமீபத்தில் மீண்டுள்ள ரஜினி..தனது முதல் மகளின் வாழ்க்கை சிக்கலால் மனம் நொந்துள்ளார். இதன் காரணமாகவே உள்ளாட்சி தேர்தலில் கூட ரஜினி வாக்களிக்க வரவில்லை என கூறப்படுகிறது. அதோடு தனது நண்பர்களிடம் தனுஷை விட்டுக்கொடுக்காமல் பேசி வருகிறாராம் ரஜினி..

மேலும் செய்திகளுக்கு... Aishwaryaa Rajinikanth : சிம்புவுடன் இணைய போகிறாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... இதென்னப்பா புது டுவிஸ்டா இருக்கு?   

தனுஷின் அதிர்ச்சி பேச்சு : 

இந்நிலையில் ரஜினி தான் தனுஷின் வளர்ச்சிக்கு காரணம் என சொல்லப்பட்டு வருவதற்கு பதிலளித்துள்ள தனுஷ் ..என் அண்ணனும் , அப்பாவும் தான் என் வளர்ச்சிக்கு காரணம். ரஜினி மருமகன் என்பது அந்தஸ்தை தந்ததே தவிர என் வளர்ச்சிக்கு உதவவில்லை என அதிர்ச்சியாக பதிலளித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!