"நன்றி கெட்ட ரஞ்சித்".. இணையத்தில் இயக்குனர் பா ரஞ்சித்தை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ் - ஏன் தெரியுமா?

By Ansgar R  |  First Published Apr 13, 2024, 3:35 PM IST

Netizens Slam Pa Ranjith : பிரபல இயக்குனர் பா ரஞ்சித் அவர்களை இணையவாசிகள் திட்டி தீர்த்து வருகின்றனர். அது ஏன் தெரியுமா? அது குறித்து இந்த பதிவில் காணலாம்.


கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "அட்டகத்தி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குனராக அறிமுகமானவர் தான் பா. ரஞ்சித். தனக்கென தனி பாதை அமைத்து அதில் பயணம் செய்யும் ஒரு மிகச் சிறந்த இயக்குனராக அவர் இன்றளவும் திகழ்ந்து வருகிறார். இவருடைய இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக மாறி உள்ளது.

குறிப்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு இவருடைய இயக்கத்தில் வெளியான "மெட்ராஸ்" திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதைத்தொடர்ந்து 2016 மற்றும் 2018 ஆகிய இரண்டு ஆண்டுகள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து "கபாலி" மற்றும் "காலா" ஆகிய இரு மாபெரும் வெற்றி திரைப்படங்களை கொடுத்தார். 

Latest Videos

undefined

வச்சு செய்யணும்... கொச்சையாக கமெண்ட் செய்த நெட்டிசனுக்கு ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா கொடுத்த கூல் ரிப்ளை

தற்பொழுது விக்ரம் இயக்கத்தில் "தங்கலான்" என்கின்ற திரைப்படத்தை அவர் இயக்கியிருக்கிறார். விரைவில் அந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த சூழலில் எக்ஸ் பக்கத்தில் #நன்றி_ கெட்ட_ரஞ்சித் என்ற ஹாஷ்டேக் மிகப்பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதற்கு என்ன காரணம் என்று தேடி பார்த்த பொழுது ஒரு வீடியோ கிடைத்தது. 

அண்மையில் ரஞ்சித் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில், அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரஞ்சித் அவர்களிடம் ஒரு கேள்வியை முன் வைக்கிறார். அதில் தளித் அரசியல் குறித்து ரஜினியை பேச வைத்தவர் நீங்கள், ஆனால் அது என்னவென்று அவருக்கு தெரியுமா? தெரியாதா? என்பது தெரியவில்லை, என்று கூற உடனே அதை கேட்ட பா ரஞ்சித் பலமாக சிரிக்கின்றார். 

இது ரஜினிகாந்த் அவர்களை அவமதிப்பது போல உள்ளதாக கூறி நெட்டிசன்கள் அவரை பெரிய அளவில் விமர்சித்து வருகின்றனர். மேலும் நன்றி கெட்ட ரஞ்சித் என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Meena: எனக்கு மீனா தான் வேண்டும்! அடம்பிடித்த 63 வயது நடிகரை அசிங்கப்படுத்தினாரா கண்ணழகி? கொதிக்கும் ரசிகர்கள்

click me!