பப்ளிசிட்டிக்கு வேற எதுவும் கிடைக்கலையா?.... கங்கனாவை கலாய்த்த மீரா மிதுனை வசைபாடும் நெட்டிசன்கள்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 30, 2020, 07:41 PM IST
பப்ளிசிட்டிக்கு வேற எதுவும் கிடைக்கலையா?.... கங்கனாவை கலாய்த்த மீரா மிதுனை வசைபாடும் நெட்டிசன்கள்...!

சுருக்கம்

கங்கனாவை பற்றி பேச உங்களுக்கு தான் தகுதியில்லை, விளம்பர  தேடுறதுக்கு வேற எந்த விஷயமும் கிடைக்கலையா? என சகட்டுமேனிக்கு வசைபாடி வருகின்றனர்.  

பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் இன்று வரை சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லாதவர் மீரா மிதுன். மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்த இவர், தனது சினிமா ஆசையை நிறைவேற்றி கொள்வதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் காலடி எடுத்துவைத்தார். அங்கு முதல் நாளில் இருந்தே மீரா மிதுனை பிரச்சனைகள் சூழ்ந்து கொண்டன. அதுபோதாது என்று தேவையில்லாமல் சேரன் மீது பொய் புகார் கூறி, சேற்றை வாரிப்பூசிக்கொண்டார். 

இதனால் பார்வையாளர்களின் கோபத்திற்கு ஆளான மீரா மிதுன், அந்த நிகழ்ச்சியில் தோற்று வெளியேறினார்.அதன் பின்னர் அனைத்து பட வாய்ப்புகளும் கைவிட்டு போக, எப்படியாவது ஹீரோயினாக நடித்தே தீருவேன் என்று அரைகுறை ஆடையில் கண்கூசும் படியான கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அதை பார்த்து நெட்டிசன்கள் கடுப்பாகி கழுவி ஊத்தினாலும் கண்டுகொள்வதே இல்லை. 

 

இதையும் படிங்க: சரிய இருந்த விஜய்... தட்டித்தூக்கிய அட்லி.... தளபதி ரசிகர்களுக்காக என்னவெல்லாம் செஞ்சிருக்கார் தெரியுமா?

டூப்பீஸ், கர்சீப் சைஸ் டிரஸ், முன்னழகு மொத்தமும் தெரிய முரட்டு போஸ் என இனி காட்ட ஒன்றுமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லாத்தையும் காட்டிவிட்டார். மீரா மிதுன் பதிவிடும் போட்டோக்களையும், வீடியோக்களையும் பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள், அவரை பங்கமாக கலாய்த்தும், கழுவி ஊற்றியும் வருகின்றனர். இடையே கருத்து சொல்கிறேன் என வந்து அவரே புண்ணாக்கி கொள்கிறார். அப்படி தான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரனாவத்திற்கு தகுதியில்லை என ட்விட்டரில் கொளுத்தி போட்டார். 

 

இதையும் படிங்க: படுக்கையறையில் கணவருக்கு லிப்லாக்... முத்த போட்டோவிற்கு புதுவித விளக்கம் கொடுத்த வனிதா...!

 தமிழகத்தை சேர்ந்த பிரபல சாதனையாளர் நான் தான். என் மாநிலத்திற்காக, தாய்நாட்டிற்காக, ஆணாதிக்கம் அதிகம் உள்ள கோலிவுட்டால் எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து தைரியமாக நான் பேசினேன் என சுய தம்பட்டம் அடித்துக்கொண்டார். இதனால் கடுப்பான நெட்டிசன்கள் பலரும் மீராவை கழுவி ஊத்தி வருகின்றனர். கங்கனாவை பற்றி பேச உங்களுக்கு தான் தகுதியில்லை, விளம்பர  தேடுறதுக்கு வேற எந்த விஷயமும் கிடைக்கலையா? என சகட்டுமேனிக்கு வசைபாடி வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!