
மறைந்த கேமராமேன் ஜீவா இயக்கிய கடைசிப் படம் "தாம் தூம்". இதில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் கங்கனா ரனாவத். இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனா ரனாவத், 'குயின்', 'த்னு வெட்ஸ் மனு', 'மணிகர்ணிகா' போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஏ.எல்.விஜய் இயக்கும் "தலைவி" படத்தில் நடித்து வருகிறார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோபீக்கான இதில் நடிப்பதற்காக மிகவும் ஜெவாக உருமாறிவருகிறார் கங்கனா.
இந்தியில் பாலிவுட் நடிகைகள் அவர்களுக்கு என தனி ஸ்டைலை உருவாக்கி கொள்வது வழக்கம். அதற்காக காஸ்டியூம் டிசைனர், சிகை அலங்கார கலைஞர் என ஒரு பட்டாளத்தை தங்களுக்கென தனியாக வைத்திருப்பார்கள். பார்ட்டி, கல்யாணம், சினிமா ஃபங்ஷன் என எங்கு சென்றாலும் தங்களுக்கென வடிவமைக்கப்பட்ட பிரத்யேக உடையை அணிந்து கொண்டு வலம் வருவார்கள். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாவது வழக்கமான ஒன்று.
இந்நிலையில் பிரபல நடிகையான டாப்ஸி, இந்தி நடிகை கங்கனா ரனாவத்தின் ஸ்டைலை காப்பியடிப்பதாக நெட்டிசன்கள் குறை கூற ஆரம்பித்துள்ளனர். அதனை நிரூபிக்கும் விதமாக கங்கனாவைப் போலவே, டாப்ஸி உடை, அலங்காரம், ஹேர் ஸ்டைலில் எடுத்துள்ள புகைப்படங்களை கம்பேர் செய்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அந்தப் புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள், அச்சு அசலாக டாப்ஸி, கங்கனாவை போன்றே இருப்பதாகவும், கூகுளில் தேடினால் கூட அதுவே சொல்லும் கங்கனாவின் காப்பி தான் டாப்ஸி என்றும் தேவையில்லாத கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.