சிகிச்சைக்கு பணமின்றி ஐ.சி.யூ பிரிவில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தமிழ்ப்பட இயக்குநர்...

By Muthurama Lingam  |  First Published Nov 21, 2019, 4:11 PM IST

மதுரையை சொந்த ஊராகக் கொண்டவரான துரைவாணன் இயக்குநர் அமீரிடம் அவரது முதல் படம் தொடங்கி உதவி இயக்குநராகவும் இணை இயக்குநராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார். பின்னர் நீண்ட போராடத்துக்குப் பின் ‘யாசகன்’என்ற படத்தை இயக்கினார். அங்காடி தெரு மகேஷ் நாயகனாக நடித்து 2014ல் வெளிவந்த அப்படம் மிகவும் சுமாராகப் போகவே மீண்டும் அடுத்த படம் இயக்கும் போராட்டத்தில்  இருந்தார் துரைவாணன்.
 
இயக்குநர் அமீரிடம் பல படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவரும், ‘யாசகன்’ என்ற படத்தை இயக்கியவருமான துரைவாணன் உடல்நிலை மிக மோசமான நிலையில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது மருத்துவ சிகிச்சைக்கு பொருளாதார உதவி தேவைப்படுகிறது என்றும் அவரது நண்பர்கள் முகநூலில் பதிவிட்டு வருகின்றனர்.

மதுரையை சொந்த ஊராகக் கொண்டவரான துரைவாணன் இயக்குநர் அமீரிடம் அவரது முதல் படம் தொடங்கி உதவி இயக்குநராகவும் இணை இயக்குநராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார். பின்னர் நீண்ட போராடத்துக்குப் பின் ‘யாசகன்’என்ற படத்தை இயக்கினார். அங்காடி தெரு மகேஷ் நாயகனாக நடித்து 2014ல் வெளிவந்த அப்படம் மிகவும் சுமாராகப் போகவே மீண்டும் அடுத்த படம் இயக்கும் போராட்டத்தில்  இருந்தார் துரைவாணன்.

Tap to resize

Latest Videos

இந்நிலையில் சற்றுமுன்னர் அவரது மதுரை நண்பர்கள் பகிர்ந்த முகநூல் பதிவு ஒன்றில்,...அன்பு நண்பர்களே எல்லோருக்கும் இனியவராகப் பழகிய ‘யாசகன்’இயக்குநர் நம் நண்பர் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏழ்மையான குடும்பச் சூழல் கொண்ட அவருக்கு, சிகிச்சைக்கு நண்பர்கள் உதவி செய்தால் மட்டுமே உயிர்காக்க முடியும் என்கிற சூழ்நிலை. எனவே இயக்குநர் துரைவாணன் உயிர்காக்க உதவுங்கள்’என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

click me!