மகனை ஹீரோவாகக் களம் இறக்கும் விஜய் சேதுபதி பட இயக்குநர்...

By Muthurama Lingam  |  First Published Nov 21, 2019, 2:54 PM IST

பிரபல தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியின் மகன் ஜானி, சனுஷா நடித்த ’ரேனிகுண்டா’படத்தை இயக்கியவர் பன்னீர் செல்வம். இந்தப் படம் விமர்சகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டது. இதையடுத்து ஜானி நடித்த ’18வயது’ விஜய் சேதுபதி, தன்யா நடித்த ’கருப்பன்’ஆகிய படங்களை இயக்கினார். இவர் இயக்கிய’நான்தான் சிவா’விரைவில் வெளியாக இருக்கிறது.
 
விஜய் சேதுபதியை வைத்து கருப்பன் படத்தை இயக்கிய பன்னீர் செல்வம் தனது மகனை அடுத்த படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்கிறார். இத்தகவலை அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரபல தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியின் மகன் ஜானி, சனுஷா நடித்த ’ரேனிகுண்டா’படத்தை இயக்கியவர் பன்னீர் செல்வம். இந்தப் படம் விமர்சகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டது. இதையடுத்து ஜானி நடித்த ’18வயது’ விஜய் சேதுபதி, தன்யா நடித்த ’கருப்பன்’ஆகிய படங்களை இயக்கினார். இவர் இயக்கிய’நான்தான் சிவா’விரைவில் வெளியாக இருக்கிறது.

Latest Videos

இந்நிலையில் தன் மகன் அருண் ஹீரோவாக நடிக்கும் ’தீக்குள் விரலை விட்டாய்’என்ற படத்தை இயக்குகிறார். மலையாள நடிகை ஹீரோயினாக அறிமுகமாகிறார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கின்றனர். கணேஷ் ராகவேந்திரா இசை அமைக்கிறார். அர்ஜுன் ஜெனா ஒளிப்பதிவு செய்கிறார்.சிறு கிராமத்து பின்னணியை கொண்ட இந்தப்படம் காதல், ஆக்‌ஷன், காமெடியை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட உள்ளது. இதன் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நாளை தொடங்குகிறது.

இத்தகவலை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பன்னீர் செல்வம்,...அன்பு நண்பர்களே, என் அடுத்த படைப்பில் என் மகன் அருண் பன்னீர்செல்வத்துடன் களம் இறங்குகின்றேன் ...நாளை வெள்ளி கிழமை(22.11.2019) முதல் திண்டுக்கல்லில் படப்பிடிப்பு ஆரம்பம்.விரைவில் திரையில் சந்திப்போம் என்று பதிவிட்டு அதில் தனது அருணை டேக் செய்துள்ளார்.

click me!