
கங்குவா படத்தின் டிரைலர் இன்று வெளியாகி சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. அந்த டிரைலரை பார்த்த நெட்டிசன்கள் தங்கள் விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை பார்க்கலாம்.
நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளதாவது : “தம்பிக்கு ஆயிரத்தில் ஒருவன். அண்ணனுக்கு கங்குவா. ஆயிரத்தில் ஒருவன் கமர்சியலா சரியா போகலைன்னாலும், தரமான கன்டென்ட் உள்ள படம். கார்த்தி, செல்வராகவனோட உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் தெரியும். கங்குவா Trailer ஐ வச்சு ஒன்னும் சொல்ல முடியாது, ஆனாலும் பாகுபலி படத்துல காலக்கேயர்கள் portion ஐ மட்டும் தனி படமா எடுத்த மாதிரி இருக்கு. சூர்யா, சிவா இவங்க ரெண்டு பேருக்கும் சம்பந்தம் இல்லாத ஜானர் இது. பொதுமக்கள் மத்தியிலும் வாடி வாசலுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு கங்குவாக்கு இல்லை. எதிர்பார்ப்பை குறைத்துக் கொண்டால் ஏமாற்றத்தை தவிர்க்கலாம்” என குறிப்பிட்டு இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... பாகுபலியையே மிஞ்சும் பிரம்மாண்டம்... மாஸ் காட்சிகளுடன் வெளியானது சூர்யாவின் கங்குவா டிரைலர்
மற்றொரு நெட்டிசன் போட்ட பதிவில், படத்த சிறுத்தை சிவா தானே எடுத்தாப்ல எனக்கென்னமோ ராஜமௌலி படத்தோட ட்ரைலர் மாதிரி பீல் ஆகுது மெரட்டி விட்ருக்காப்ல சிறுத்தை சிவா என பாராட்டி பதிவிட்டு இருக்கிறார்.
சூர்யா ரசிகர் ஒருவர் போட்டுள்ள பதிவில், அண்ணாவின் வெறித்தனமான நடிப்பை பார்க்கும்போதே படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை அதிகரிக்கிறது கங்குவார் தமிழ்நாட்டின் முதல் 1000 கோடி வசூலிக்கும் படமாக அமைய வேண்டும் என வாழ்த்தி உள்ளார்.
மற்றொரு ரசிகர், டிரைலரில் இடம்பெறும், ‘அறுபட்டு என் சிரம் மண்ணுருண்டாலும் உருளும், முன் நெற்றியும் முழங்காலும் மண்தொடா மண்டியிடா...’ என்கிற வசனம் அருமையாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நெட்டிசன் ஒருவர் போட்டுள்ள பதிவில், கங்குவானு வைக்கிறதுக்கு பதில் கத்தவானு வச்சிருகலாம் சூர்யா அந்த கத்து கத்துறாப்பல என கலாய்த்துள்ளார்.
கங்குவா டிரைலர் பார்த்து பாசிடிவ் விமர்சனங்கள் வருவதை போல் நெகடிவ் பதிவுகளும் அதிகளவில் வருகின்றன. அதில் ஒருவர், அஜித்-க்கு அசோகா மாதிரி, விஜய்-க்கு புலி மாதிரி, சூரியா-க்கு இந்த கங்குவா-னு என கிண்டலடித்து பதிவிட்டு இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... கார்த்தியை இப்படி ஒளிச்சி வச்சிருக்கீங்களே... கங்குவா டிரைலரில் இதையெல்லாம் நோட் பண்ணிங்களா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.