Vikram movie: இது புது அப்டேட் இல்லை...பழைய அப்டேட்...லோகேஷ் கனகராஜை வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

Anija Kannan   | Asianet News
Published : Mar 12, 2022, 12:03 PM ISTUpdated : Mar 12, 2022, 02:46 PM IST
Vikram movie: இது புது அப்டேட் இல்லை...பழைய அப்டேட்...லோகேஷ் கனகராஜை வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

சுருக்கம்

Vikram movie: கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம், படத்தின் படப்பிடிப்பு  முடிவடைந்த நிலையில், அதன்  அப்டேட்டிற்கான ரசிகர்கள் காத்து கொண்டிருகின்றனர்.

கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம், படத்தின் படப்பிடிப்பு  முடிவடைந்த நிலையில், அதன்  அப்டேட்டிற்கான ரசிகர்கள் காத்து கொண்டிருகின்றனர்.

கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம், படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 14ந் தேதி காலை 7மணிக்கு வெளியாகும் என்று லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில்  அறிவித்துள்ளார். இந்த போஸ்டரை பார்த்து  ரசிகர்கள் இது ஏற்கனவே தெரிந்த அப்டேட் தானே, புதுசா ஒன்னும் இல்லையே என்று கலாய்த்துள்ளனர்.

கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக விளங்கி வருபவர். இவர் சினிமா, அரசியல் போன்றவற்றில் எப்போதும் பிஸியாக இருந்து வருகிறார். 

'விக்ரம்’ படத்தின் ரிலீஸ்:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிரூத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்ட நிலையில், கனகராஜின் பிறந்தநாளான மார்ச் 14 ல் விக்ரம் ரிலீஸ் தேதி அறிவிக்க உள்ளதாக சமீபத்தில் கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான,ராஜ் கமல் பிலிம்ஸ்  இன்டர்நேஷனல் அறிவித்திருந்தது. .இதனால் விக்ரம் படம் ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே மாதத்தில் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

நட்சத்திர பட்டாளங்கள்:

மாஸ், ஆக்சன் மற்றும் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில், கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் மெயின் வில்லனாக நடித்துள்ளார்கள். மேலும், ஷிவானி, மகேஷ்வரி, செம்பன் வினோத், டெல்லி கணேஷின் மகன் மகாதேவன், மைனா நந்தினி, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், இந்த திரைப்படத்தில்,  7 வில்லன் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க....Kamal: விருமாண்டி 2-விற்கு எனக்கு இந்த இயக்குனர் தான் வேணும்...அடம் பிடிக்கும் கமல்! இயக்குனர் யார் தெரியுமா?

சூடுபிடிக்கும் விக்ரம் படத்தின் வியாபாரம்:

விக்ரம் படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக ஒரு புறம் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் வியாபாரமும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளதாம். மேலும், விக்ரம் படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையை ஸ்டார் நெட்வொர்க் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விக்ரம் அப்டேட் எங்கே..?

இந்நிலையில், விக்ரம் பற்றிய புதிய அப்டேட் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், விக்ரம், படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 14ந் தேதி காலை 7மணிக்கு வெளியாகும் என்று லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த போஸ்டரை பார்த்து  ரசிகர்கள் இது ஏற்கனவே தெரிந்த அப்டேட் தானே, புதுசா ஒன்னும் இல்லையே என்று மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளனர். சிலர், போங்க ப்ரோ போயி வேற வேலையை பாருங்க என்று மீம்ஸ் போட்டனர்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!