ET movie: இரண்டே நாளில் 20 கோடியை தாண்டிய சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்..! படு ''குஷியில்'' ரசிகர்கள்..!

By Anu Kan  |  First Published Mar 12, 2022, 10:52 AM IST

Etharkkum thunindhavan movie :சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம்  20 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளதால், ரசிகர்கள் படு குஷியில் உள்ளனர். 


சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம்  20 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளதால், ரசிகர்கள் படு குஷியில் உள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவருடைய நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களாக சமூகம் சார்ந்த பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட,  ஓடிடியில் வெளிவந்த ''ஜெய் பீம்''. மற்றும் சூரரை போற்றும் திரைப்படங்கள் வெற்றியை குவித்தன.ஜெய் பீம் ஆஸ்கரை நெருங்கும் அளவிற்கு வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Latest Videos

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்:

இதையடுத்து, கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு திரையரங்கில் நேற்று முன்தினம் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில், சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த படம் எதற்கும் துணிந்தவன். பொள்ளாச்சி பிரச்சனையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் போதிய ஆதரவை பெற்று தந்தது.

நட்சத்திர பட்டாளங்கள்:

சூர்யாவின் 40வது திரைப்படமான எதற்கும் துணிந்தவன் படத்தில், சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். வில்லனாக நடிகர் வினய்யும் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த, படத்திற்கு, இமான் இசையில், ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், புகழ் மற்றும் சூரி, வினை, ஜெய் பிரகாஷ், தேவதர்ஷினி என பலர் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  

தெலுங்கில் போதிய வரவேற்பு இல்லை:

படம் தமிழ், மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம் உள்ளிய  5 மொழிகளில் வெளியாகியிருந்தது. இருப்பினும், தெலுங்கில் படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி, தெலுங்கில் வெளிவந்த பாகுபலி நடிகர்  பிரபாஸின் ''ராதே ஷ்யாம்'' வெற்றியை தொடர்ந்து, எதற்கும் துணிந்தவன் படத்தின் தமிழ் பதிப்பு  திரையிடப்பட்டு ஒரே நாளில் தூக்கப்பட்டுள்ளதாக, வந்துள்ள செய்தி ரசிகர்களை கவலை அடைய செய்தது. 

இரண்டாம் நாள் வசூல் விவரம்:

அதில், தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் முடிவில் ரூ. 6ல் இருந்து 7 கோடி வசூலித்திருந்தது. அதேபோன்று, கேரளாவில் முதல் நாளில் ரூ. 1 கோடி வசூலித்திருந்தது. இந்நிலையில், இரண்டாவது நாள் முடிவில்  சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் தமிழகத்தில் ரூ. 12 கோடி வரை வசூலித்திருக்கிறது. மேலும், உலகம் முழுவதும் படம் ரூ. 20 கோடி வரை வசூலித்திருப்பதாக தகவல் வந்துள்ளது.

படு குஷியில் ரசிகர்கள்:

கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், எதற்கும் துணிந்தவன் படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 

முதல் நாளே எதற்கும் துணிந்தவன் படத்திற்கு ரசிகர்கள் அளித்துள்ள பிரம்மாண்ட வெற்றியை படக்குழுவினர் கேட் வெட்டி கொண்டாடிய  புகைப்படங்களை நடிகர் சூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க....ET movie: ஒரே நாளில் தியேட்டரில் இருந்து தூக்கப்பட்ட சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்! பாகுபலி ஹீரோ தான் காரணமா?

click me!