Etharkkum Thunindhavan movie: சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படம் நேற்று முன்தினம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீசானது. இந்த படம், வெளியிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் மாஸான வரவேற்பை பெற்று தந்தது.
சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படம் நேற்று முன்தினம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீசானது. இந்த படம், வெளியிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் மாஸான வரவேற்பை பெற்று தந்தது. இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில், சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படத்தில், சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். வில்லனாக நடிகர் வினய்யும் நடித்துள்ளார்.
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை மையமாக வைத்து, எடுக்கப்பட்ட படம் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் உள்ளதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என பக்கா கமர்ஷியல் படமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்குகளில், ரிலீசான இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சூர்யாவின் 40வது திரைப்படமான எதற்கும் துணிந்தவன் படத்திற்கு, இமான் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். .மேலும், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், புகழ் மற்றும் சூரி, வினை, ஜெய் பிரகாஷ், தேவதர்ஷினி என பலர் நடித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் முதல் நாள் முடிவில் 7 கோடி வசூல்:
அதில், தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் முடிவில் ரூ. 6ல் இருந்து 7 கோடி வசூலித்திருந்தது. அதேபோன்று, கேரளாவில் முதல் நாளில் ரூ. 1 கோடி வசூலித்திருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு காட்சியிலும் படம் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் உள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
தெலுங்கில் போதிய வரவேற்பு இல்லை:
தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ரிலீசாகியுள்ள இந்த படத்திற்கு, தெலுங்கு மாநிலங்களில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லையாம். சூர்யா தெலுங்கில் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டதுடன், படத்திற்கான தெலுங்கு டப்பிங்கை அவரே பேசியிருந்தார். ஆனா,ல் தெலுங்கு மாநிலங்களில் படம் எதிர்பார்த்த படி வரவேற்பை பெறவில்லை என்று கூறப்படுகிறது.
பாகுபலி நடிகர் காரணமா..?
அதுமட்டுமின்றி, பாகுபலி நடிகர் பிரபாஸ்ஸின் ''ராதே ஷ்யாம்'' வெளியாகியுள்ளதால் எதற்கும் துணிந்தவன் படத்தின் தமிழ் பதிப்பை, படம் திரையிடப்பட்டு ஒரே நாளில் அனைத்து திரையரங்குகளிலும் தூக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
ராதே ஷ்யாம் படம் காரணமா..?
ராதே ஷ்யாம் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. முன் பதிவில் மட்டும் ஐதராபாத்திரல் 4 கோடி ரூபாய் படம் வசூலித்துள்ளதாம். ராதே ஷ்யாம் படம் வெற்றியை தொடர்ந்து, 'எதற்கும் துணிந்தவன்'' படத்தின் தெலுங்கு பதிப்பு மட்டுமே, தற்போது குறைவான திரையரங்குகளில் மட்டுமே ஓடிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், பிரபாஸ்ஸின் ராதே ஷ்யாம் படத்தின் டீசர், ட்ரைலர், பாடல்கள் சிறப்பான வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.