மங்காத்தா விளையாடும் போட்டியாளர்கள்.. என்னங்க பிக்பாஸ் இதெல்லாம்?

Kanmani P   | Asianet News
Published : Mar 12, 2022, 11:38 AM ISTUpdated : Mar 12, 2022, 11:39 AM IST
மங்காத்தா விளையாடும் போட்டியாளர்கள்.. என்னங்க பிக்பாஸ்  இதெல்லாம்?

சுருக்கம்

இன்று மங்காத்தா ஸ்டைலில் இரு ஸ்டார் யாருக்கு வருகிறதோ அந்த அணி வெற்றி பெறும் என பிக்பாஸ் கூறுகிறார். அதன்படி சீட்டுக்கட்டுகளை வைத்து போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.  

பிக்பாஸ் அல்டிமேட் :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி செம ரீச் ஆனா பிக்பாஸ் நிகழ்ச்சி 1 மணி நேரம் ஒளிபரப்பப்பட்டு வந்தது. 17 க்கும் மேற்பட்ட போட்டியார்கள் 100 நாட்கள் என விறுவிறுப்பாக நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து 24 மணி நேரமும் ஓடிடியில் ஒளிப்பப்பட்டு வருகிறது.

ரசிர்களின் வேண்டுகோள் :

பிக்பாஸ் வீட்டில் முழு நாள் நிகழ்வுகளும் வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே ஒளிபரப்ப பட்டது. அதிலும் உற்பட்ட விளம்பரங்கள் வேறு. இதனால் பிக்பாஸ் வீட்டின் நடவடிக்கைகளை முழுமையாக கவனிக்க முடியவில்லை என ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வந்தனர். ரசிர்களின் இந்த மனக்குறையை போக்கவே பிக்பாஸ் அல்டிமேட் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு.. Bigg Boss Priyanka : நட்பே துணை... நடுரோட்டில் பிக்பாஸ் நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் பிரியங்கா

டிவியை விட  ரேட்டிங்க் குறைவு தான் :

பிக்பாஸ் வெளியாகும் அந்த 106 நாட்களும் மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் படு அடிவாங்கும். வெளியில் டீசண்டாகா நடமாடும் பிரபலங்களின் சுய ரூபத்தை காண ஆர்வமாக இருக்கும் ரசிகர்கள் அந்த நாட்களில் மற்ற சீரிஸ்களை நேயர்கள் மறந்து விடுவார்கள் என்றே தோன்றுகிறது.ஆனால் தற்போது அல்டிமேட் என்கிற பெயரில் ஓடிடியில் பிக்பாஸ் ஒளிபரப்பாகி வருகிறது. இது போதுமான வரவேற்பை பெறவில்லை என்றே கூறப்படுகிறது.

பின்வாங்கிய கமல்-உள்நுழைந்த சிம்பு :

விக்ரம் படத்தில் கவனம் செலுத்துவதற்காக பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகுவதாக கமல் திடீர் அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் உண்மையில் விக்ரம் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. எலெக்சன் நேரம், கொரோனா பாதிப்பு என இக்கட்டான வேளையில் கூட பின்வாங்காத கமலின் இந்த முடிவுக்கு ஓடிடி ரேட்டிங் குறைவு என்பதே காரணம் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து சிம்பு பிரமாண்ட ப்ரோமோவுடன் தொகுப்பாளராக  உல் நுழைந்துள்ளார்.  

மேலும் செய்திகளுக்கு.. கண்டமேனிக்கு கலவரம் செய்யும் பாலாஜி..பெண் விவகாரத்தை விடவே மாட்டிங்களா?.

பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள் : 

பிக்பாஸின் முந்தைய சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களை தேர்வு செய்து அல்டிமேட்டுக்கு அனுப்பியுள்ளது நிறுவனம். இதில் வனிதா, ஜூலி, அனிதா, அபிராமி,ஸ்ருதி, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சினேகன், சுரேஷ் சக்ரவர்த்தி, வருண், தாமரை, நிரூப் என 14 போட்டியாளர்கள் இடம் பிடித்தனர். பின்னர் திடீரென வனிதா தானாக வெளியேறியதை அடுத்து ஏற்கனவே எலிமினேட் ஆன சுரேஷ் வைல்ட் கார்ட் மூலம் திரும்பி வந்தார். இவரோடு கேபிஒய் சதீஷ், ரம்யா பாண்டியனும் வந்துள்ளனர். இதுவரை பிக்பாஸுக்கு வராத போட்டியாளர் என்றால் அடு சதீஷ் தான்.

பிக்பாஸ் அல்டிமேட் மங்காத்தா : 

நேற்று எதிர் அணியிடமிருந்து காயினை பறிக்க வேண்டும் என்கிற டாஸ்கில் செம ரகளையே நடைபெற்று முடிந்து விட்டது. எப்போதும் போல தனது வெற்றிக்காக பாலாஜி முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். இதையடுத்து இன்று மங்காத்தா ஸ்டைலில் இரு ஸ்டார் யாருக்கு வருகிறதோ அந்த அணி வெற்றி பெறும் என பிக்பாஸ் கூறுகிறார். அதன்படி சீட்டுக்கட்டுகளை வைத்து போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Asha Bhosle Net Worth: ரூ.250 கோடி சொத்து, வெளிநாட்டு பிசினஸ்..! ஆஷா போஸ்லேவின் வாரிசு யார்?
விஜய் தேவரகொண்டா பேசிய அந்த வார்த்தை! கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்ட ராஷ்மிகா ! என்ன நடந்தது ?