”கமீலாவுக்கு எதிரான பிரச்சாரத்துக்குப் பின்னால் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்”...மவுனம் கலைத்த நாசர்...

By Muthurama LingamFirst Published Apr 4, 2019, 4:57 PM IST
Highlights

”நானும் என் மனைவி கமீலாவும் தேர்தல் முடிந்த பிறகு வேற்று கிரகத்துக்குப் பறந்து செல்லப்போவதில்லை. எனவே எங்களைப் பற்றி எனது தம்பி தெரிவித்த புகார்களுக்கு தேர்தல் முடிந்த பிறகு தெளிவாக பதில் சொல்கிறேன். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்லமுடியும்” என்கிறார் நடிகர் நாசர்.
 

”நானும் என் மனைவி கமீலாவும் தேர்தல் முடிந்த பிறகு வேற்று கிரகத்துக்குப் பறந்து செல்லப்போவதில்லை. எனவே எங்களைப் பற்றி எனது தம்பி தெரிவித்த புகார்களுக்கு தேர்தல் முடிந்த பிறகு தெளிவாக பதில் சொல்கிறேன். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்லமுடியும்” என்கிறார் நடிகர் நாசர்.

’கடந்த 25 ஆண்டுகால தன்னைப் பெற்ற தாய்,தந்தை இருவரையும் வறுமையில் தவிக்கவிட்டு கோடிகளில் புரள்கிறார் நாசர். அப்பாவியான அவரை பெற்றோருக்கு உதவ விடாமல் தடுத்தவர் அவரது மனைவியான கமீலா. அப்படி வீட்டையே காக்கமுடியாத கமீலாவா நாட்டைக் காக்கப்போகிறார்? என்று மத்திய சென்னையில் போட்டியிடும் கமீலாவுக்கு எதிராகப் பேட்டிகள் கொடுத்துவருகிறார் நாசரின் சகோதரர் ஜவகர்.

கடந்த ஒரு வாரகாலமாகவே ஜவகர் வைத்துவந்த அந்தப் பஞ்சாயத்துக்குப் பதிலே சொல்லாமல் மவுனம் காத்துவந்த நாசர் கமலிடம் ஆலோசனை கேட்டிருப்பார் போல. நீண்ட ஆலோசனைக்குப் பின் தெளிவாகக் குழப்பும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நாசர்.

அந்த அறிக்கையில்,''என்னை அறிந்தோர் புரிந்தோர் எல்லோருக்கும் என் வணக்கங்கள். சமீபகாலமாக என் குடும்பம்சார் பிரச்சினைகள் எல்லா ஊடகங்களிலும் வந்து கொண்டிருக்கின்றன. கமீலா நாசருக்கு 'ஓட்டுப் போட்டுவிடாதீர்கள்' என்ற ஒரு செய்தி கடத்தவே ஒரு குடும்பத்தை வீதிக்கு இழுப்பது கேவலம் என்று கருதுகிறேன். இதற்குப் பின்னால் ஆதாயம் பெறும் அரசியல் வித்தகர்கள் பின் நின்று ஆட்டுவிக்கிறார்கள் என்று நான் எண்ணுவது இயற்கையானது.

நாசரின் நிழலின் கீழ் வளர்ந்தவர் அல்ல கமீலா. என்னைப் போலவே அவருக்கான தனித்துவம், தனித்திறன் இருக்கிறது.

நான், அல்லது நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை என் 40 வருட வாழ்க்கை உங்களுக்குச் சொல்ல வேண்டும். அதற்கான தருணம் இதுவல்ல. ஆனால், நான் விளக்குவேன். உரிய நேரத்தில் உரியவர்களுக்கு செய்ய வேண்டியது செய்யப்பட்டது. குடும்பத்தில் ஒருவருடைய பலமான தூண்டுதல் பேரிலேயே என்னுடைய கடமை தடை செய்யப்பட்டது. அதை மீறியும் என் கடமைகளை நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கிறேன்.

பல விஷயங்கள் மறைக்கப்பட்டு, நடந்த சில விஷயங்கள் திரிக்கப்பட்டு, வலு சேர்க்க சிலவற்றை புனையப்பட்டு, இச்சகதி எங்கள் மேல் வீசப்பட்டிருக்கிறது.வேட்பாளர் ஒருவர் மீது சுமத்துவதற்கு பழி ஒன்றும் கிடைக்காத போது வீசப்பட்ட சகதி எங்கள் பொது வாழ்க்கைக்கு கிடைத்த பரிசென்றே கருதுகிறேன். தேர்தலை முன் வைத்து வீசப்பட்ட இச்சகதி தேர்தல் வரை எங்களே மீதே கிடந்து நாறட்டும். என்ன நடந்தது என்று சொல்ல வேண்டிய கட்டாயத்தை நான் உணரவே செய்கிறேன்.

தேர்தல் நிறைவுறட்டும், நான் கமீலாவும் வேறு கிரகத்திற்கு பறந்து செல்லப் போவதில்லை. எதிர்கொள்ள தின்மையும் இருக்கிறது. தெளிவும் இருக்கிறது. இப்போதைக்கு இவ்வளவே''.என்கிறார் நாசர்.

click me!