காதலன் விக்னேஷ் சிவனின் வாய்க்கொழுப்பால் வாங்கிய சம்பளத்தை திரும்பக்கொடுக்கும் நயன்தாரா...

Published : Apr 04, 2019, 04:20 PM IST
காதலன் விக்னேஷ் சிவனின் வாய்க்கொழுப்பால் வாங்கிய சம்பளத்தை திரும்பக்கொடுக்கும் நயன்தாரா...

சுருக்கம்

எதற்கெடுத்தாலும் ட்விட்டரில் பதிவுகள் போட்டு வம்பு வளர்த்துவரும் காதலன் விக்னேஷ் சிவனால் ’கொலையுதிர்காலம்’படத்துக்கு வாங்கிய சம்பளத்தைத் திரும்பித் தரவேண்டிய நிலை நயன் தாராவுக்கு ஏற்பட்டுள்ளது. ரிலீஸுக்குத் தயாராக உள்ள நயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’ படத்தைக் கைவிடப்பட்ட படம் என்று கமெண்ட் அடித்ததே இப்பிரச்சினைக்குக் காரணம்.

எதற்கெடுத்தாலும் ட்விட்டரில் பதிவுகள் போட்டு வம்பு வளர்த்துவரும் காதலன் விக்னேஷ் சிவனால் ’கொலையுதிர்காலம்’படத்துக்கு வாங்கிய சம்பளத்தைத் திரும்பித் தரவேண்டிய நிலை நயன் தாராவுக்கு ஏற்பட்டுள்ளது. ரிலீஸுக்குத் தயாராக உள்ள நயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’ படத்தைக் கைவிடப்பட்ட படம் என்று கமெண்ட் அடித்ததே இப்பிரச்சினைக்குக் காரணம்.

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கொலையுதிர் காலம்'. படம் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டியபோது குறிப்பான காரணங்கள் எதுவும் சொல்லாமல் படத்தைவிட்டு வெளியேறிய யுவன், இசையமைக்கவும் போவதில்லை என்று ட்விட்டியிருந்தார்.

குழப்பமான இந்நிலையில் நடந்த இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளோடு பேசினார் ராதாரவி.  இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் நயன்தாராவின் காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த கருத்துகளில் “இந்தப் படத்தை தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் சில ஆண்டுகளுக்கு முன்னரே கைவிட்டுவிட்டனர் என்றே நினைத்தேன். சற்றும் பொருத்தமற்ற நிகழ்ச்சி. தேவையற்ற நபர்கள் கலந்து கொண்டு என்ன பேசுகிறோம் என்று தெரியாமலயே உளறிக்கொட்டினர்’என்று தேவையில்லாத பழைய பஞ்சாயத்துக்களைப் பரப்பி இது ஒரு பிரச்சினைக்குரிய படம் என்பதுபோல சித்தரித்தார்.

விக்னேஷ் சிவனின் இந்த பதிவால், 'கொலையுதிர் காலம்' படக்குழு பெரும் அதிர்ச்சியடைந்தது. ஏனென்றால், ’கைவிடப்பட்ட படம்’ என்று குறிப்பிட்டார் விக்னேஷ் சிவன்.  கோடை விடுமுறைக்கு இப்படத்தை வெளியிடலாம் என்று வியாபாரப் பேச்சை படக்குழு  தொடங்கியிருந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவனின் கருத்துகளை முன்வைத்து, ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு முன் வாங்கிக் கொள்கிறேன் என்று தெரிவித்த பலரும் தற்போது வேண்டாம் என்று விலகிவிட்டார்கள். மேலும், படத்தின் டிஜிட்டல் உரிமையை முன்னணி நிறுவனம் ஒன்று வாங்க முடிவெடுத்தது. தற்போது அந்நிறுவனமும் ஓடி ஒளிந்து கொண்டது.

விக்னேஷ் சிவனின் கருத்துகளால் படத்தின் முழு வியாபாரமும் பாதிக்கப்பட்டு இருப்பதால், அவர் மீது வழக்கு தொடர இயக்குநர் சக்ரி டோலட்டி முடிவு செய்துள்ளார். அவரது ட்வீட்டால் ஏற்பட்ட நஷ்டத்தை அவரே அளிக்க வேண்டும் அல்லது படத்துக்காக நயன்தாரா வாங்கிய மொத்த சம்பளத்தையும் நஷ்ட ஈடாக வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கவிருக்கிறதாம் படக்குழு.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!