அப்பா எழுதி; அம்மா நடித்த பாடலை க்யூட்டாக பாடிய விக்கி - நயன் மகன்கள்

By Ganesh A  |  First Published Nov 26, 2024, 2:51 PM IST

Nayanthara Sons Uyir and Ulag Sing song :  நானும் ரெளடி தான் படத்தில் இடம்பெற்ற தங்கமே பாடலை விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடியின் மகன்கள் பாடிய செம க்யூட் வீடியோ வைரலாகிறது.


விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். சுமார் 7 வருட காதல் வாழ்க்கைக்கு பின் திருமண பந்தத்தில் இணைந்த இந்த ஜோடி, திருமணம் முடிந்த நான்கு மாதங்களிலேயே தாங்கள் பெற்றோர் ஆகிவிட்டதாகவும், தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும் அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர். அவர்களின் இந்த அறிவிப்பை பார்த்த பலரும் கேட்ட ஒரே கேள்வி, 4 மாதத்தில் எப்படி குழந்தை பிறந்தது என்பது தான்.

பின்னர் தான் அவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது தெரியவந்தது. அந்த இரட்டை ஆண் குழந்தைகளுக்கு உயிர், உலக் என பெயரிட்டு உள்ளனர். மகன்கள் மீது அதீத பாசம் வைத்துள்ள விக்னேஷ் சிவன், அவர்களை மனதில் வைத்து சினிமா பாடல்களை எழுதி உள்ளார். குறிப்பாக நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து சூப்பர்ஹிட்டான ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்ற ரத்தமாரே பாடலில் தன் மகன்களின் பெயரை பயன்படுத்தி இருப்பார் விக்கி.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படியுங்கள்... விஜய்யை தொடர்ந்து அரசியல் எண்ட்ரிக்கு ரெடியான சத்யராஜ் மகள் திவ்யா!

அதேபோல் நயன்தாராவை காதலிக்கும் போது அவரை நினைத்து காதல் பாடல்களை எழுதி இருக்கிறார் விக்னேஷ் சிவன். குறிப்பாக நானும் ரெளடி தான் படத்தின் போது தான் இவர்கள் இருவரும் காதலித்தனர் என்பதால், அப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே நயன்தாராவின் மீதுள்ள காதலை வெளிப்படுத்துவதற்காக விக்கி எழுதியது. அதனால் அப்பாடல்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

அப்படி நானும் ரெளடி தான் படத்திற்காக விக்னேஷ் சிவன் எழுதிய தங்கமே பாடலை பார்த்து நயன்தாராவின் மகன்கள் இருவரும் க்யூட்டாக பாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தங்கள் மழலை மொழியால், அடடடடா... அப்பப்பப்பபா என பாடுவதை பார்த்த ரசிகர்கள் செம க்யூட்டாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருவதோடு, அதற்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.

இதையும் படியுங்கள்... ராஜ வாழ்க்கை வாழும் கோலிவுட் ‘ஹிட்’மேன் லோகேஷ் கனகராஜ் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

click me!