
கேரளாவைச் சேர்ந்த நயன்தாரா, ஹரி இயக்கிய ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார். அவருக்கு முதல் படமே மிகப்பெரிய பெயரையும் புகழையும் கொடுத்த நிலையில், அடுத்தடுத்து ரஜினியுடன் சந்திரமுகி, விஜய்யுடன் சிவகாசி, சிம்புவுடன் வல்லவன் என ஹிட் பட வாய்ப்புகள் தேடி வந்தன. இதனால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார் நயன்தாரா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா அளவில் கலக்கி வருகிறார் நயன்.
தற்போது நடிகை நயன்தாராவுக்கு வயது 40ஐ நெருங்கினாலும் இன்றளவும் கோலிவுட்டில் டாப் ஹீரோயினாக வலம் வருகிறார். 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் நயன்தாரா, கடந்த 2005-ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த கஜினி படத்தில் நடித்தது, தன் வாழ்க்கையில் தான் எடுத்த மோசமான முடிவு என்று பழைய பேட்டி ஒன்றில் ஓப்பனாக கூறி இருக்கிறார். அது தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... Deepika Padukone: கர்ப்பமாக இருக்கும் வயிற்றுடன் 'கல்கி 2898 AD' பட விழாவில் கலந்து கொண்ட தீபிகா படுகோன்!
வானொலி ஒன்றிற்கு அளித்த அந்த பேட்டியில் நயன்தாரா கூறியதாவது : “கஜினி படத்தில் சித்ரா கதாபாத்திரத்தில் நடித்தது நான் எடுத்த மோசமான முடிவு. இயக்குனர் அந்த கதாபாத்திரத்தை என்னிடம் சொன்னபோது அது ஹீரோயினுக்கு நிகரானதாக இருந்தது. ஆனால் படத்தில் எனக்கு சொல்லப்பட்ட விதத்தில் அந்த கதாபாத்திரம் வரவில்லை. மோசமாக காட்டி இருந்தார்கள். இதை நான் புகாராக சொல்லவில்லை. அதுவும் என் வாழ்வில் ஒரு அனுபவமாக கருதுகிறேன்” என நயன் கூறி இருக்கிறார்.
கஜினி திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, அதில் ஹீரோவாக சூர்யாவும், ஹீரோயினாக அசினும் நடித்திருந்தனர். அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதோடு, தமிழ் சினிமாவின் மாஸ்டர் பீஸ் படங்களாக திகழ்ந்து வருகிறது. மேலும் அப்படம் இந்தியிலும் ஆமீர்கான் நடிப்பில் ரீமேக் ஆகி அங்கும் சக்கைப்போடு போட்டது. இப்படி ஒரு தரமான படத்தில் நடித்தது மோசமான அனுபவம் என நடிகை நயன்தாரா கூறி இருப்பது தற்போது இணையத்தில் மீண்டும் பேசுபொருள் ஆகி உள்ளது.
இதையும் படியுங்கள்... இயக்குனர் வெற்றிமாறனுக்கு இந்த கெட்ட பழக்கங்கள் எல்லாம் இருந்துச்சா.. அவரே சொன்ன பதில்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.