
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் அனைத்து படங்களுக்குமே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இவர் நடித்து முடித்துள்ள 'நிழல்' திரைப்படம் ஏப்ரல் 2 ஆவது வாரம் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்: அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக இந்த பெயர் சூட்டியுள்ளோம்! மகன் பெயரை வெளியிட்ட கார்த்தி!
தென்னிந்திய திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தற்போது ரஜினிகாந்துடன் 'அண்ணாத்த', காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகி வரும் 'நெற்றிக்கண்' என பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர், மலையாளத்தில் நடித்துள்ள 'நிழல்' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில், ஏப்ரல் 2 ஆவது வாரம் வெளியாகும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் 'நிழல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பெற்றது. பிரபல மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை தேசிய விருது பெற்ற எடிட்டர் அப்பு என்.பட்டாதிரி இயக்கியுள்ளார். நிழல் படம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படும் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடிகர் பிருத்விராஜ் நடித்த 'கோல்டு கேஸ்' என்ற திரைப்படமும் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: கொஞ்சம் கூட குறையாத காதல்... இறுக்கி அணைத்தபடி ரொமான்ஸ் பண்ணும் அட்லீ - பிரியா! லேட்டஸ்ட் போட்டோஸ்!
நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான, 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம், கொரோனா பிரச்சனை காரணமாக , ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், முன்பை விட தற்போது கொரோனா பிரச்சனைகள் சற்று ஓய்ந்துள்ளதால், நயன்தாராவின் நிழல் படம் திரையாங்கில் வெளியாக உள்ளது. கேரளாவில் தற்போது இரவு காட்சிக்கு அனுமதி கொடுக்கப்படாத நிலையில், அடுத்த மாதம் அனுமதி கொடுக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.