சுயேச்சை வேட்பாளராக களமிறங்கும் நடிகர் மன்சூர் அலிகான்! எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் தெரியுமா?

Published : Mar 17, 2021, 05:29 PM ISTUpdated : Mar 17, 2021, 06:30 PM IST
சுயேச்சை வேட்பாளராக களமிறங்கும் நடிகர் மன்சூர் அலிகான்! எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் தெரியுமா?

சுருக்கம்

சம்பீத்தில், கட்சி ஒன்றை துவங்கிய நடிகர் மன்சூர் அலிகான் அவரது கட்சிக்கு முறையான அங்கீகாரம் கிடைக்காததால், சுயேச்சையாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.  

சம்பீத்தில், கட்சி ஒன்றை துவங்கிய நடிகர் மன்சூர் அலிகான் அவரது கட்சிக்கு முறையான அங்கீகாரம் கிடைக்காததால், சுயேச்சையாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

இயக்குனரும், அரசியல் தலைவருமான சீமான் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு, லோக்சபா தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் களம் கண்டவர் , நடிகர் மன்சூர் அலிகான். சமீபத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி, ‘தமிழ் தேசிய புலிகள் கட்சி’ என்கிற ஒன்றை துவங்கி உள்ளதாக அறிவித்தார்.

இந்நிலையில் தன்னுடைய கட்சியான ‘தமிழ் தேசிய புலிகள் கட்சி’ க்கு, முரையான அங்கீகாரம் கிடைக்காததால், சுயேச்சையாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். கோவை ‘தொண்டாமுத்தூர்’ தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக மன்சூர் அலிகான் போட்டியிட உள்ளார்.  இதற்காக 18.03.2021 நாளை காலை 11’மணிக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

நடிகர் மன்சூர் அலிகான் சுயேட்சையாக போட்டியிட உள்ள, கோவை தொந்தாமுத்தூர் தொகுதியில், அதிமுகவில் செல்வாக்குமிக்க தலைவராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் உள்ள எஸ்.பி.வேலுமணி தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள தொண்டாமுத்தூரில் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த நிலையில், அவருக்கு சவால் விடும்விதமாக திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழக இளைஞர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான கார்த்திகேய சிவசேனாபதியை போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சூரி; ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன?
ரோகிணிக்குள் நுழைந்த ஆவி - அதிர்ச்சியில் மனோஜ்! 'சிறகடிக்க ஆசை' சீரியல் லேட்டஸ்ட் அப்டேட்!