
தமிழ் சினிமாவில் திறமையான நடிகை என பெயர் எடுத்துவிட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து சவாலான வேடங்களை தேர்வு செய்து, தன்னுடைய நடிப்பு திறமைக்கு தீனி போட்டு வருகிறார். அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டி வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் 'கனா'.
மேலும் செய்திகள்: இரியடித்தை காட்டி ரூ.26 கோடி மோசடி செய்த இசையமைப்பாளர்... கம்பி எண்ணும் பிரபல நடிகையின் மகன்..!
இந்த படத்தை மிகப்பெரிய சவாலாக ஏற்று, கடுமையாக கிரிக்கெட் பயிற்சி எடுத்து, கிரிக்கெட் வீராங்கனையாக நடித்திருந்தார். பின்னர் இந்த படம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரபல இந்திய தடகள வீராங்கனையும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் தமிழ் பெண்ணுமான 'சாந்தி சௌந்தரராஜனின்' வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் இதனை ஐஸ்வர்யா ராஜேஷ் தரப்பு மறுத்துள்ளது.
இதுகுறித்து அவரது செய்தி தொடர்பாளர், வெளியிட்டுள்ள தகவலில் தடகள வீராங்கனை, சாந்தி சௌந்தரராஜன் வாழ்க்கை வரலாற்றில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவில்லை என்று கூறி தெளிவுபடுத்தியுள்ளார். ஜெயசீலன் தவப்புதல்வி இயக்கவிருக்கும் இந்த வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க 3 அறிமுக நடிகைகளை தேர்வு செய்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் நடிக்க உள்ள நடிகை யார் என்பதை தெரிந்து கொள்வதில் ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர்.
மேலும் செய்திகள்: குண்டாய் கொழுக், மொழுக்குன்னு மாறிய 'சூரரை போற்று' அபர்ணா..! சேலையில் சிறகடித்த புகைப்படங்கள்..!
ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தை 888 நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பெண்களை மையமாக வைத்து உருவாகி வரும் 'டிரைவர் ஜமுனா' மற்றும் சில தெலுங்கு படங்களிலும் நடிக்க கமிட் ஆகி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.