என்னாத்துக்கு நோட்டு..? பிரபு தேவா பாடிய விழிப்புணர்வு பாடலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்! #வீடியோ

By manimegalai aFirst Published Mar 17, 2021, 6:03 PM IST
Highlights

தேர்தல் காலங்களில், வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமை, வாக்குகளை பணம் பெற்று கொண்டு விற்க கூடாது என்பது போன்ற பல்வேறு விழிப்புணர்வுகளை தேர்தல் ஆணையம் முன்னின்று கூறி வந்தாலும், இதையே மக்களின் மத்தியில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்கள் கூறும் போது, மிகவும் வேகமாக அவர்களை சென்றடையும். 
 
மேலும் செய்திகள்: கொஞ்சம் கூட குறையாத காதல்... இறுக்கி அணைத்தபடி ரொமான்ஸ் பண்ணும் அட்லீ - பிரியா! லேட்டஸ்ட் போட்டோஸ்!

அந்த வகையில், தற்போது நடிகர், நடன இயக்குனர், இயக்குநர், தயாரிப்பாளர் என திரையுலகில் பல்வேறு திறமைகளோடு விளங்கும்  நடிகர் பிரபுதேவா தமிழகச் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பாடல் ஒன்றை பாடியுள்ளார். "என்னத்துக்கு நோட்டு... என்னக்கு ஒரு டவுட்டு" என துவங்கும் இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் செம்ம ட்ரெண்ட் ஆகி வருகிறது.

நடிகர் பிரபுதேவா பாடி உள்ள இந்த பாடலில், ஓட்டு நம்ம உரிமை, உணர்த்துக்கிட்ட பெருமை, காச வாங்கி ஓட்டு போட்டா தீர்ந்துடுமா வறுமை, போன்ற வரிகளும், தமிழகத்தில் 100 சதவீத வாக்கு மற்றும் தன்னுடைய வாக்கு விற்பனைக்கு இல்லை என்பது போன்ற விழிப்புணர்வு வசங்களும் இடம்பெற்றுள்ளது.  எனவே 2021 தேர்தலில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பிரபுதேவா, பாடியுள்ள பாடல் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்: கொஞ்சம் கூட குறையாத காதல்... இறுக்கி அணைத்தபடி ரொமான்ஸ் பண்ணும் அட்லீ - பிரியா! லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போதும் இதேபோல தேர்தல் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
அதைத் தொடர்ந்து தற்போதும் தமிழக தேர்தலுக்கான விளம்பரத் தூதராக நடிகர் பிரவுதேவா பணியாற்றி இருக்கிறார். இவரது இந்த செயலை ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

Renowned choreographer and cinema personality Prabhu Deva, State SVEEP Icon for Tamil Nadu, encouraging voters to participate in an informed and ethical manner in this pic.twitter.com/ycJfHEQ8c4

— Election Commission of India #SVEEP (@ECISVEEP)

click me!