
நடிகை நயன்தாரா மிலிண்ட் ராவ் இயக்கத்தில் வித்தியாசமாக த்ரில்லர் ஜர்னரில் மிரட்டியுள்ள திரைப்படம் 'நெற்றிக்கண்' இந்த படத்தின் ட்ரைலர் முதல் டைட்டில் பாடல் வரை நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் படத்திலும், அதே அளவு பரபரப்பும் வேகமும் படத்தில் இருந்ததா? இந்த படத்தின் பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் பற்றி பார்க்கலாம் வாங்க...
பாசிட்டிவ்:
தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் நயன்தாரா, இதற்க்கு முன் நடித்திராத கண்தெரியாத பெண்ணாக நடித்துள்ளது பாராட்ட வேண்டிய விஷயம் தான்.
ஆரம்பம் முதல், கடைசி வரை... ஒரு பார்வையற்ற பெண் போலவே தத்ரூபமாக தன்னுடைய கதாபாத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சிபிஐ போலீஸாகவும் சரி, ஒரு பாசமான அக்காவாகவும் சரி தன்னுடைய வெறியேஷனை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
படத்தின் மியூசிக் மற்றும் ஒளிப்பதிவு அற்புதம்.
நயன்தாராவை தொடர்ந்து அஜ்மலும் ஒரு சைக்கோவாக, தன்னுடைய நடிப்பை சிறப்பாகவே வெளிப்படுத்தியுள்ளார்.
நெகடிவ்:
ட்ரைலரில் எதிர்பார்த்த அளவுக்கு, படத்தில் இருந்த விறுவிறுப்பு சற்று குறைவுதான். இதுவே ரசிகர்களை செம்ம அப்செட் ஆக்கியது.
பல இடங்களில் லாஜிக் மிஸ்ஸிங்... இதனால் லேடி சூப்பர் ஸ்டார் படம் என்றாலே இப்படி லாஜிக் மிஸ் ஆகுமா? என சிலர் கேள்வி எழுப்பும் விதத்தில் உள்ளது.
புதிதாக ஒரு கதையை எதிர்பார்த்தவர்களுக்கும் சற்று ஏமாற்றம் என்றே கூறலாம். வழக்கமான ஒரு சைக்கோ கதையாகவே இது இருந்தது.
கண் தெரியாமல் நயன்தாராவின் சாகசங்கள் சில காட்சிகளில் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இல்லை.
நயன்தாரா... அஜ்மல் மற்றும் போலீசை வைத்து வலுக்கட்டாயமாக படத்தை நகர்த்தியது போல் தெரிந்தது.
நயன்தாராவை விட வில்லனை பாவமாக பார்க்க வைத்துவிட்டார் இயக்குனர்.
எனவே எந்த ஒரு லாஜிக்கும் எதிர்பார்க்காமல்... நயன்தாராவின் புதியதொரு நடிப்பை பார்க்க நீங்கள் சென்றால் கண்டிப்பாக உங்களுக்கு படம் பிடிக்கும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.