பட்டம் வாங்கிய மகள்... புகைப்படத்தை பகிர்ந்து நெகிழ்ந்து போன குஷ்பு... வைரல் போட்டோஸ்!

Published : Aug 14, 2021, 07:41 PM ISTUpdated : Aug 14, 2021, 08:01 PM IST
பட்டம் வாங்கிய மகள்... புகைப்படத்தை பகிர்ந்து நெகிழ்ந்து போன குஷ்பு... வைரல் போட்டோஸ்!

சுருக்கம்

இந்தியாவில் சினிமாவில் எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமைக்கு சொந்தக்காரி குஷ்பு, அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் கோவில் கட்டினர். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் குஷ்பு. வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்தவர். அரசியலிலும் திமுக, காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து தற்போது பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். விரைவில் குஷ்புவிற்கு பாஜக தலைமை மிக முக்கிய பொறுப்பை கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.   

டி.வி. நிகழ்ச்சிகள், சினிமா, அரசியல் என படுபிசியாக இருந்தாலும் குஷ்பு பொறுப்பான குடும்பத் தலைவியாக தனது கடமைகளை தவறியதே கிடையாது. 1995ம் ஆண்டு ஜெயராம், குஷ்பு, மனோரமா, கவுண்டமனி நடித்த முறைமாமன் படத்தை சுந்தர் சி இயக்கினார். அப்போது குஷ்புவிற்கும், சுந்தர் சிக்கும் இடையே காதல் தீ பற்றியது. அன்று முதல் இன்று வரை ஒன்றுபட்ட உள்ளத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு அவந்திகா, அனந்திதா என்று இரண்டு டீன் ஏஜ் மகள்கள் உள்ளனர். 

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் குஷ்பு எப்போதும் தன்னுடைய மகள்கள் மற்றும் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இன்று அப்படி குஷ்பு தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்துள்ள புகைப்படத்துடன் கூடிய மகிழ்ச்சியான செய்தி ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம், குஷ்புவின் இளைய மகளான அனந்திதா கல்லூரி படிப்பை வெற்றிகரமாக முடித்து பட்டம் பெற்றுள்ளார். 

கொரோனா பரவல் காரணமாக பட்டமளிப்பு விழா ஆன்லைனில் நடந்துள்ளது. இதனை இணையம் மூலமாக கண்டு களித்த குஷ்பு, “என் வாழ்வில் இப்போது ஒரு உணர்ச்சிகரமான தருணம். என் குழந்தை தனது படிப்பில் பட்டம் பெற்று ஒரு புதிய உலகத்திற்குள் அடியெடுத்து வைக்கிறாள்.  பள்ளியில் கோட் மற்றும் தொப்பியில் அவளைப் பார்க்கும் போது உணர்ச்சி பெருக்குடன் இருப்பதாகவும்,  தான்  அவளை தனது அலுவலகத்தில் இருந்தே ஆன்லைனில் பார்த்து மகிழ்வதையும் பகிர்ந்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?