அட பாவமே இது என்ன நயன்தாராவின் 'நெற்றிக்கண்' படத்திற்கு வந்த சோதனை! வெளியான சில நிமிடங்களில் இப்படியா?

By manimegalai a  |  First Published Aug 13, 2021, 5:32 PM IST

நடிகை நயன்தாரா நடித்துள்ள 'திரில்லர்' திரைப்படமான நெற்றிக்கண் இன்று மதியம் 12 :30 மணிக்கு வெளியான நிலையில், இந்த படம் வெளியான சில நிமிடங்களிலேயே... திருட்டு தனமாக தமிழ் ராக்கர்ஸ் மற்றும் சில ஆன்லைன் தளங்களில் வெளியாகியுள்ளது படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
 


நடிகை நயன்தாரா நடித்துள்ள 'திரில்லர்' திரைப்படமான நெற்றிக்கண் இன்று மதியம் 12 :30 மணிக்கு வெளியான நிலையில், இந்த படம் வெளியான சில நிமிடங்களிலேயே... திருட்டு தனமாக தமிழ் ராக்கர்ஸ் மற்றும் சில ஆன்லைன் தளங்களில் வெளியாகியுள்ளது படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தொடர்ந்து வித்தியாசமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து, தன்னுடைய நடிப்பு திறனை வெளிப்படுத்தி வரும் நயன்தாரா... தற்போது இயக்குனர் மிலிண்ட் ராவ் இயக்கத்தில் த்ரில்லர் ஜர்னரில் மிரட்டியுள்ள திரைப்படம் 'நெற்றிக்கண்'. இந்த படத்தின், ஃபர்ஸ்ட் லுக், ட்ரைலர், டைட்டில் சாங் என அட்டகாசமாக இருந்த நிலையில், இன்று இப்படம் 'ஹாட் ஸ்டார்' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. சரியாக இன்று மாலை 12 :30 மணிக்கு வெளியான இந்த படம் குறித்து பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

Tap to resize

Latest Videos

நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இந்த படத்தில்,  கண் தெரியாத பெண்ணாக நடித்து... பார்பவர்களையே மிரள செய்துள்ளார். பார்வை உள்ளவர்கள் போராட முடியாத ஒரு சைக்கோவிடம் சிக்கி கொண்டு, எப்படி தனக்கு வரும் பிரச்சனைகளை நயன் சமாளிக்கிறார். வில்லனை பழிவாங்குகிறார் என, நொடிக்கு நொடிக்கு விறுவிறுப்பு குறையாமல் படமாக்கப்பட்டுள்ளது 'நெற்றிக்கண்'. 

ரசிகர்களின் பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியான இந்த படம், ஓடிடி தளத்தில் வெளியான 10 முதல் 15 நிமிடங்களிலேயே... தமிழ் ராக்கர்ஸ், மற்றும் சில ஆன்லைன் தளங்களில் வெளியாகியுள்ளது படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.  

click me!