சிவகார்த்திகேயன் ஆசையை நிறைவேற்றிய நயன்தாரா...

 
Published : Apr 19, 2017, 02:56 PM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
சிவகார்த்திகேயன் ஆசையை நிறைவேற்றிய நயன்தாரா...

சுருக்கம்

nayanthara fullfilled sivakarthikeyan dream

தமிழ் சினிமா தற்போது அனைத்து முன்னணி கதாநாயகர்களும் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசைப்படும் நாயகி  லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான். ஆனால் அவரோ முன்னணி கதாநாயகன் படத்தில் நடிப்பதை விட அவருக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.   

அண்மையில் இவரது நடிப்பில் வெளியான மாயா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது, அதே போல் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான டோரா படத்திற்கு பல எதிர்பார்ப்புகள் இருந்தாலும், ரசிகர்கள் சற்று இடமாற்றம் அடைந்ததாகவே கூறப்படுகிறது.

 தற்போது சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். நயன்தாராவுடன் ஒரு படத்திலாவது ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட சிவகார்த்திகேயனுக்கு இப்படம் மூலம் நிறைவேறியுள்ளதாம்.

நயன்தாராவிடமே தனக்கு உங்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது ஆசை என சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறாராம்.

இதற்கு முன் பல மேடைகளில் நயன்தாராவுடன் டூயட் பாட வேண்டும் என்பது தனது ஆசை என கூறிய ஜெயம் ரவிக்கும் தனி ஒருவன் படம் மூலம் நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!