
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த சில மாதங்களாகவே தமிழர்களுக்கு எதிராகவும், ரஜினி, கமல் போன்ற நடிகர்களுக்கு எதிரகாவும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்தது தான்.
சமீபத்தில் கூட கமல் ஒரு அகங்காரம் பிடித்த முட்டாள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்,மேலும் இலங்கை பயணத்தை ரத்து செய்த ரஜினியை ஒரு கோழை என்றும் விமர்சனம் செய்தார். இதற்கு கமல், ரஜினி ரசிகர்கள் சுப்பிரமணியன் சுவாமிக்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ரஜினி குறித்து சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். ரஜினிக்கு அரசியலைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று கூறிய அவர், தமிழக அரசியல் வாதிகள் அனைவரும் நல்ல நடிகர்கள் என்று கூறியுள்ளார்.
ரஜினி குறித்த சுவாமியின் விமர்சனத்திற்கு ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.