குழந்தைகளை முழுமையாக விடுங்கள்... சந்தோஷத்தை சுரண்டி விடாதீர்கள்... கவிஞர் தாமரை வேண்டுகோள்...

 
Published : Apr 18, 2017, 07:53 PM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
குழந்தைகளை முழுமையாக விடுங்கள்... சந்தோஷத்தை சுரண்டி விடாதீர்கள்... கவிஞர் தாமரை வேண்டுகோள்...

சுருக்கம்

song writter thamarai

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகின்றது. குறிப்பாக இன்றும் நாளையும் மதிய நேரத்தில் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அரசு எச்சரிக்கும் அளவுக்கு வெயிலின் கொடுமை உள்ளது. 

இந்த நிலையில் சுட்டெரிக்கும் கோடை காலத்தில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கவும், கோடையில் விடுமுறை அளிக்காமல் ஒருசில தனியார் பள்ளிகள் வகுப்புகள் நடத்துவதை கண்டித்தும் கவிஞர் தாமரை தனது சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: 

17.4.17. நாளை வெயில் வாட்டியெடுக்கும் என்று தொ.காட்சியில் செய்தி போட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். வெளியே போவதை முடிந்தவரை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறார்கள். இன்னும் மூன்று நாளைக்கு இப்படித்தான் கொளுத்துமாம்.

ஆனால் குழந்தைகளுக்குப் பள்ளி விடுமுறை இதுவரை விடப்படவில்லை. அரசு அதிகாரபூர்வமாகவே ஏப்.21 வரை பள்ளி வேலை செய்யும் என்று அறிவித்திருக்கிறது. குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவா வேண்டாவா ?

தனியார் பள்ளிகள் இன்னும் கொடுமை ! மாதக்கடைசி வரை பள்ளி நாளாக வைத்திருக்கின்றன. 10,12 போகும் குழந்தைகள் நிலை பரிதாபத்திலும் பரிதாபம் ! மே மூன்றாவது வாரமே பள்ளி தொடங்கி விடுகிறது. யாருக்காக வேண்டி இந்தச் சீரழிவு ???. கோடை விடுமுறையில் படித்துத்தான் கோட்டை கட்ட வேண்டுமா ?.

எல்லாவற்றையும் சுரண்டிக் கொண்டீர்கள். குழந்தைகளின் குழந்தைப் பருவத்தையாவது விட்டு வையுங்களேன். இந்த விளையாட்டுப் பருவத்தை விட்டுவிட்டால் இனி வாழ்நாளில் என்றேனும் திருப்பி அடைய முடியுமா ?. பெரியவர்கள் மனசைத் தொட்டுச் சொல்லுங்கள், சிறுவயதில் நாமெல்லாம் கோடை விடுமுறையைக் கொண்டாடிக் களிக்கவில்லையா ?.

"குழந்தைகளுக்கு முழுமையான இரண்டு மாதங்கள் விடுமுறை அளிக்க அரசை வேண்டிக் கொள்கிறேன்". பொதுமக்கள் இந்தக் கருத்தை சமூக வலைதளங்களில் பெரிதுபடுத்த வேண்டுகிறேன். எல்லோரும் சேர்ந்து குரல் எழுப்பினால்தான் குழந்தைகளைக் காப்பாற்ற முடியும்.

இவ்வாறு கவிஞர் தாமரை தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளதோடு, இந்த கோரிக்கையை வலியுறுத்தி கல்வி அமைச்சரை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!