ஜெ ஆட்சியும் சரியில்லை... கலைஞர் ஆட்சியும் திருப்தி இல்லை... - ராஜ்கிரண் அதிரடி கருத்து

 
Published : Apr 18, 2017, 05:59 PM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
ஜெ ஆட்சியும்  சரியில்லை... கலைஞர் ஆட்சியும் திருப்தி இல்லை...  - ராஜ்கிரண்  அதிரடி கருத்து

சுருக்கம்

rajkiran open talk about his tamil nadu politics

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் கடந்த சில மாதங்களாக தமிழக அரசியலில் நிலையில்லாத குழப்பமான நிலை தான் நிலவி வருகிறது. 

இந்த நிலையில் சினிமாவில் மட்டும் இல்லாமல் நிஜத்திலும் எந்த கருத்தையும் துணிச்சலாக பதிவு செய்யும் நடிகர் ராஜ்கிரண், தமிழக அரசியல் குறித்து பேசியுள்ளார். இதில் தமிழகத்தில் ஒட்டுமொத்த ஆட்சியும் சரியில்லை என்று துணிச்சலாக தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.



அவர் மேலும் கூறியபோது 'கடந்த ஆறு மாதமாகத்தான் அதாவது ஜெயலலிதா மறைவிற்கு பின்னர்தான் ஆட்சியில் குழப்பம் ஏற்படுகிறது என்று கூறுவது சரியில்லை. ஜெயலலிதா இருந்தபோதும், அதற்கு முன்னர் ஆட்சி செய்த கலைஞர் ஆட்சியின்போதும் மக்கள் திருப்தி இல்லாமல்தான் இருந்தனர்.


தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் அமைப்பே சரியில்லை. இதற்கு ஒரு மாற்றம் வரவேண்டும். அந்த மாற்றம் எப்போது வரும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட முயற்சி செய்ய வேண்டும்' என்று கூறினார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!