Nayanthara: KRK படத்தின் வெற்றிக்கு பிறகு விக்னேஷ் சிவன், நயன்தாரா முதன் முதலில் சென்ற இடம்...வைரல் போட்டோ..

By Anu Kan  |  First Published May 5, 2022, 6:19 PM IST

Nayanthara, Vignesh shivan Visit: வித்தியாசமான கதைக்களம் கொண்ட காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று திரையரங்கில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. 


இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், கடந்த ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் ஆன இந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் வசூல் ரீதியாகவும். விமர்சன ரீதியாவும்  நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

நல்ல வசூல் வேட்டை:

Tap to resize

Latest Videos

தற்போது வரையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதனால் இப்படம் நல்ல ஹிட் அடித்த திரைப்படமாக பார்க்கப்படுகிறது.

undefined

இந்த திரைப்படத்தை, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து, விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்டுள்ளது.  இந்த படத்திற்கு அனிருத் இசைமையத்துள்ளார். 

கண்மணி, கதிஜா பீவர்:

முக்கோண காதல் கதையை மையமாக கொண்ட இந்த படத்தில், கதிஜாவாக சமந்தாவும், கண்மணியாக நயன்தாராவும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்கள் இருவரையும் காதலிப்பவராக 
விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இதையடுத்து, இந்த படத்தின் வெற்றியை விஜய் சேதுபதி, விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடி இருந்தார்கள். இதையடுத்து, நடிகை சமந்தா வீடியோ மூலம் தனது நன்றியை தெரிவித்திருந்தார். 

விக்னேஷ் சிவன் - நயன்தாரா:

இந்நிலையில் தற்போது, விக்னேஷ் சிவன் தனது காதலியான நயன்தாராவுடன் சீரடி சாயி பாபா கோவில் சென்று  சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன் கண்மணியுடன் சீரடி சாயி பாபாவை சந்தித்து விட்டு வருவதாக பதிவிட்டுள்ளார்.      

மேலும் படிக்க....Ajith 61 Update: பாலிவுட் நடிகையை ஓரம் கட்டிய அஜித்..? அஜித்திற்கு ஹீரோயினாகும் 43 வயது நடிகை..யார் தெரியுமா? 

click me!