’இனி நிம்மதியா தூங்குன மாதிரிதான்... பேரழகி நயன்தாராவுடன் அமெரிக்கா பறந்த விக்னேஷ் சிவன்...VERY EXCLUSIVE...

Published : Dec 31, 2018, 03:50 PM ISTUpdated : Dec 31, 2018, 03:52 PM IST
’இனி நிம்மதியா தூங்குன மாதிரிதான்... பேரழகி நயன்தாராவுடன் அமெரிக்கா பறந்த விக்னேஷ் சிவன்...VERY EXCLUSIVE...

சுருக்கம்

இந்நிலையில் நேற்று வெளியான ,விஸ்வாசம்’ ட்ரெயிலரில் நயனை அஜீத் அழைத்த ‘பேரழகி’ என்ற அதே அடைமொழியுடன் கொஞ்சும் விக்னேஷ் சிவன் சில மணி நேரங்களுக்கு முன் நயனுடன் விமானம் ஏறினார்.  

’என் பேரழகியை அழைத்துக்கொண்டு லாஸ் வேகாஸ் போகிறேன். அவருக்கு மிக மிகத் தேவைப்படுகிற ஓய்வு இது. இந்த ஓய்வை எடுத்துக்கொள்ள அவ்வளவு தகுதி படைத்தவர் என் பேரழகி’ என்று உருகி மருகி வழிகிறார் நயன்தாராவின் செல்லாக்குட்டியான விக்னேஷ் சிவன்.

சில மாதங்களாகவே தனது காதலி நயனுடன் செலவழிக்கும் நெருக்கமான தருணங்களை ஒன்றுவிடாமல் தனது வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து தமிழ் வாலிப வயோதிக அன்பர்களின் நிம்மதியான தூக்கத்தைக் கெடுத்து, வயிற்றெரிச்சலையும் சம்பாதித்து வருகிறார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் நேற்று வெளியான ,விஸ்வாசம்’ ட்ரெயிலரில் நயனை அஜீத் அழைத்த ‘பேரழகி’ என்ற அதே அடைமொழியுடன் கொஞ்சும் விக்னேஷ் சிவன் சில மணி நேரங்களுக்கு முன் நயனுடன் விமானம் ஏறினார்.

புத்தாண்டைக்கொண்டாடவும், ஓய்வெடுப்பதற்காகவும் உல்லாசமாக இருப்பதற்காகவும் இருவரும், அதாவது அவங்க இருவர் மட்டும் லாஸ் வேகாஸ் போகிறார்களாம். அதைப் படமாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் சிவன்.

கடந்த சில மாதங்களாக இடைவிடாத படப்பிடிப்புகளில் பிசியாக இருந்த நயனின் இந்த திடீர் அமெரிக்க பயணத்தால் அவர் 10ம் தேதி ரிலீஸாக இருக்கும் ‘விஸ்வாசம்’ பட பிரிமியர் ஷோக்களுக்கு ஆஜராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

’ஒரு கல்யாணச் சாப்பாடு கூட போடாம எங்க பேரழகியை இப்படி கண்டிநியுவா கண்டம் பண்ணிக்கிட்டிருக்கியே... நீ நல்லா இரு ராசா’ போன்ற கமெண்டுகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?