
மக்களுக்காக "முக்கிய வேண்டுதல்"..! பழனியை நோக்கி பாத யாத்திரையில் பிக்பாங்ஸ் பரணி..!
பிக்பாஸ் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகர் பரணி ஒவ்வொரு ஆண்டும் பழனிக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் பழனிக்கு சென்று உள்ளார். இதில் என்ன சிறப்பு என கேட்கிறீர்களா.?
ஆம். இது குறித்து நமது ஏசியாநெட் நிருபர் அவரிடம் பேசியபோது, "நான் வருடம் தோறும் பழனிக்கு செல்வது வழக்கம். பழனி முருகன் என்றால் எனக்கு கொள்ள பிரியம். பக்தியும் அதிகம். எனவே தான் வருடம் தோறும் புத்தாண்டு என்றாலே எனக்கு பழனியில் தான் விடியும் என்றார்.
சரி.பாத யாத்திரை சென்று உள்ளீர்களே என கேள்வி எழுப்பியதற்கு..?
இந்த வருடம் காஜா புயலால் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்தது எனக்கு மட்டுமல்ல. யாருக்குமே பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அப்போது நான் புதுக்கோட்டை உள்ளிட்ட கஜாவால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டேன். நான் நேரில் பார்த்த காட்சிகள் இன்னும் என் மனதை விட்டு மறையவில்லை. என்னால் முடிந்த அளவிற்கு அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினேன்.
இது போன்ற இன்னொரு சம்பவம் இனி நடக்கக்கூடாது என முருக பெருமானை வேண்டுகிறேன். இதை எல்லாம் என் மனதில் ஒரு வேண்டுதலாக வைத்துக்கொண்டு தான் தற்போது மதுரையிலிருந்து மக்களோடு மக்களாக பழனிக்கு பாத யாத்திரை மேற்கொண்டு உள்ளேன் " என அவர் தெரிவித்து உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.