சிறுமியாக இருக்கும் போதே பாலியல் பலாத்காரம் செய்த நவீன்...! விஜய் டிவி பிரபலம் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியிட்ட திவ்யா..!

 
Published : Jul 04, 2018, 04:53 PM ISTUpdated : Sep 19, 2018, 02:37 AM IST
சிறுமியாக இருக்கும் போதே பாலியல் பலாத்காரம் செய்த நவீன்...! விஜய் டிவி பிரபலம் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியிட்ட திவ்யா..!

சுருக்கம்

naveen abuse me first wife divya open talk

விஜய் டிவியில் ஒளிபரப்பான, 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சி மூலம் பல குரல்களில் பேசி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நவீன். இவர் காதலித்து பதிவு திருமணம் செய்துக்கொண்ட திவ்யா என்கிற பெண்ணை ஏமாற்றிவிட்டு மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்ற பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக கடந்த சில மாதத்திற்கு முன், கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் முதல் மனைவி திவ்யா. 

மேலும் நீலாங்கரையில் நடைபெற்ற நவீன் மற்றும் கிருஷ்ணா குமாரி திருமணத்தையும் அதிரடியாக தடுத்து நிறுத்து, பதிவு திருமணம் செய்துக்கொண்ட ஆதாரங்களை வெளியிட்டார். 

திவ்யா பரபரப்பு குற்றசாட்டு:

இந்நிலையில் திவ்யா தற்போது கூறியுள்ளது என்னவென்றால்... நவீன் தான் சிறுமியாக இருக்கும் போதே தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக திடுக்கிடும் தகவல் ஒன்றை கூறியுள்ளார். 

இதுகுறித்து இவர் சமீபத்தில் கொடுத்துள்ள ஒரு பேட்டியில்...2007 ஆம் ஆண்டில் இருந்தே தனக்கு நவீனை நன்றாக தெரியும். அப்போது நவீனின் அம்மா என் அம்மாவிடம் சிறு தொகை கடனாக பெற்றார். ஆனால் அவரால் என் அம்மாவிடம் வாங்கிய தொகையை திருப்பி கொடுக்க முடியவில்லை.

அந்த கடனை அடைக்கும் விதத்தில் நவீனின் தங்கை எனக்கு டியூசன் எடுத்தார். அதற்காக நான் அவர் வீட்டிற்கு தினமும் செல்வேன், அப்போது தான் தனக்கும் நவீனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. 

வழக்கம் போல் ஒரு நாள் நான் டியூசன் சென்ற போது... வீட்டில் நவீனை தவிர யாருமில்லை. அந்த தனிமையை பயன்படுத்திக்கொண்டு நவீன் எனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தார். ஆனால் நவீன் மீது எனக்கும் காதல் இருந்ததால் அதை நான் யாரிடமும் கூறவில்லை.

என்னை திருமணம் செய்துக்கொண்டு காலம் முழுவதும் என்னுடன் இருப்பார் என நான் எதிர்பார்த்தேன், ஆனால் தற்போது நிலைமையே மாறியுள்ளது என மிகவும் வேதனையோடு கூறியுள்ள திவ்யா, நவீனின் தங்கை திருமணத்திற்கு கூட ஒரு லட்சம் பண உதவி செய்துள்ளதாக கூறுகிறார்.  

கிருஷ்ணா குமாரி:

நவீனுக்கு தோழியாக அறிமுகமான கிருஷ்ண குமாரி பற்றி திவ்யா கூறுகையில், முதலில் நவீன் கிருஷ்ண குமாரியுடன் டப்ஸ் மேட்ச் செய்து தொடர்ந்து வெளியிட்டு வந்தார். அதனை நான் கேட்டதற்கு இவரை தான் நான் திருமணம் செய்ய உள்ளேன் என கூறி அதிரவைத்தார். 

நவீன் தன்னுடைய கணவர் என நான் கிருஷ்ணகுமாரியிடம் கூறியதற்கு அவர் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும் இருவரும் சேர்ந்து என்னை கேவலப்படுத்தும் விதத்தில் என்னுடைய புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட்டுள்ளதாகவும், இனியும் இந்த நிலை தொடர்ந்தால் தான் சாவதை விட வேறு வழி இல்லை என கூறியுள்ளார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சவுக்கு சங்கர் கைதுக்கு நான் தான் காரணம்..! தானாக முன்வந்து ஸ்டேட்மெண்ட் கொடுத்த சினிமா தயாரிப்பாளர்
ஆதி குணசேகரனுக்கு ஆட்டம் காட்டும் அப்பத்தா.. அறிவுக்கரசி எடுக்கும் எதிர்பாரா முடிவு - களம் மாறும் எதிர்நீச்சல்