
தேசிய விருது வென்ற நடிகர் சஞ்சாரி விஜய், கடந்த 12 ஆம் தேதி விபத்தில் சிக்கி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் உயிரிழந்துள்ளார். இவரது மரணம் கன்னட திரையுலக பிரபலங்களை கலங்க வைத்துள்ளது.
மேலும் செய்திகள்: செம்ம ஹாட்... கலந்து பறக்கும் முடி... மாடர்ன் உடையில் மலைக்க வைக்கும் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்..!
38 வயதாகும் கன்னட நடிகர், சஞ்சாரி விஜய் தனது நண்பர் நவீனுடன் பெங்களூரில், இரவு 11:45 மணியளவில் மருந்து வாங்குவதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது துரதிர்ஷ்டவசமாக, அவர் சென்ற பைக்... லாம்ப் போஸ்ட்டில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சறுக்கி விழுந்த, இருவரும் பலத்த காயமடைந்து அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தால் நடிகர் சஞ்சாரி விஜய்யின் நண்பர் நவீனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் நடிகர் சஞ்சாரி விஜய் தலையிலும், கால்களிலும், பலத்த காயம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து ஆபத்தான நிலையில் விஜய்க்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வந்தபோதிலும், அவர் மூளை சாவு அடைந்ததாக கூறப்பட்டது. இந்த சம்பவம் கன்னட திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்: அசப்பில் நடிகை அஞ்சலி மாதிரியே இருக்கும் நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன்..! ஆச்சர்யப்பட வைக்கும் போட்டோஸ்..!
நடிகர் சஞ்சாரி 'ரங்கப்பா ஹோபிட்னா', 'தசவலா', 'ஹரிவு', 'கில்லிங் வீரப்பன்', 'நானு அவனல்ல அவளு'உட்பட பல கன்னட படங்களில் நடித்துள்ளார். 'நானு அவனல்ல அவளு' படத்தில் திருநங்கையாக நடித்ததற்காக 2015 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். மேலும் சிறந்த நடிகருக்கான கன்னட திரையுலகின் ஸ்டேட் அவார்டையும் பெற்றுள்ளார். இவரது திடீர் மறைவு, கன்னட திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகர் கிச்சா சுதீப் உள்ளிட்ட பலர் தொடர்ந்து, பல பிரபலங்கள் அடுத்தடுத்து தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: தனி ஜெட் விமானத்தில் அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்..! மத்திய அரசு அனுமதி..!
மேலும் விபத்தில் சிக்கி மூளை சாவு அடைந்துள்ள சஞ்சாரி விஜய்யின் உடல் பாகங்களை அவரது குடும்பத்தினர் தானம் வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.