
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனி ஜெட் விமானத்தின் மூலம், மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவுவதற்கு முன், சினிமா படப்பிடிப்புகளுக்கு தளர்வுகள் அளித்த போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வந்த 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் நடித்து முடித்துவிட்டு, ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பினார்.
ஹைதராபாத்தில் இருந்து வந்த கையேடு தன்னுடைய வீட்டில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி போட்டு கொண்டார். இந்த புகைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டது.
மேலும் செய்திகள்: முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட காமெடி நடிகர் யோகி பாபு..!
இதற்கிடையே, ரஜினிகாந்த் வழக்கமாக மேற்கொள்ளப்படும் பரிசோதனைக்காக சென்னையில் இருந்து அமெரிக்கா செல்ல உள்ளார் என்கிற தகவல் ஏற்கனவே வெளியானது. இந்நிலையில் இது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில் படி... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரத்தேயகமாக 16 சீட் கொண்ட தனி ஜெட் விமானம் மூலம் அமெரிக்கா செல்ல மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பரிசோதனையின் போது, ரஜினிகாந்தின் குடும்பத்தினர் அனைவருமே அமெரிக்கா செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: ஆடையின்றி நடிக்க கோடி ரூபாய் அதிகம் வாங்கிய பிரபல நடிகை... மொத்தம் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஏற்கனவே 'தி கிரேட் மேன்' படப்பிடிப்பில் கலந்து கொள்ள, பிப்ரவரி மாதம் சென்னையில் இருந்து அமெரிக்கா பறந்த நடிகர் ரஜினிகாந்தின் மருமகன் தனுஷ், அவரது மகள் ஐஸ்வர்யா, மற்றும் இரண்டு பேரன்களும் அங்கு தான் உள்ளனர். எனவே தனுஷும் தன்னுடைய மாமனார் சிகிச்சை முடிந்த பின் ரஜினிகாந்துடன் இந்தியா வருவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்: வீட்டு தோட்டத்தை மகள் ஆராதனாவுடன் பார்வையிடும் சிவகார்த்திகேயன்..! கியூட் புகைப்படங்கள்..!
இதற்கிடையில் ரஜினிகாந்த் தற்போது நடித்து முடித்துள்ள, 'அண்ணாத்த' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை, இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் ஆரம்பிக்கப்பபட்டு, முடிந்த பின்னர் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது. டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி மற்றும் ஜெகபதி பாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.