'மாநாடு' படத்தை கைப்பற்ற போட்டி போடும் ஓடிடி தளங்கள்..! சுரேஷ் காமாட்சியின் இறுதி முடிவு இது தான்!

Published : Jun 14, 2021, 04:27 PM IST
'மாநாடு' படத்தை கைப்பற்ற போட்டி போடும் ஓடிடி தளங்கள்..! சுரேஷ் காமாட்சியின் இறுதி முடிவு இது தான்!

சுருக்கம்

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி, ரசிகர்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, 'மாநாடு ' படத்தை கைப்பற்ற ஓடிடி தளங்கள் போட்டி போடுவது பற்றி படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமேஷ், தன்னுடைய முடிவை அதிரடியாக கூறியுள்ளார்.  

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி, ரசிகர்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, 'மாநாடு ' படத்தை கைப்பற்ற ஓடிடி தளங்கள் போட்டி போடுவது பற்றி படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமேஷ், தன்னுடைய முடிவை அதிரடியாக கூறியுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். இந்த படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மட்டுமே மீதம் உள்ளது. 

இப்படத்தில் சிம்புவுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு முடிந்த கையேடு டப்பிங் பணிகளும் நிறைவடைந்து விட்டது. எனினும்... தற்போது சினிமா பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால்  மீதம் உள்ள பணிகள் மட்டும் இன்னும் முடிவடையாமல் உள்ளது.

தற்போது திரையரங்குகளில் படங்கள் எப்போது ரிலீஸ் செய்யப்படும் என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளதால், ஓடிடி தளங்கள் முன்னணி நடிகர்கள் படங்களை கை பற்ற போட்டி போட்டு வருகிறது. அந்த வகையில், சிம்பு நடித்துள்ள 'மாநாடு' படத்தை கைப்பற்ற சில ஓடிடி தளங்கள், அந்த படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சியை அணுகியதாகவும் அதற்க்கு அவர், 'மாநாடு' திரைப்படத்தை திரையரங்கில் தான் வெளியிடுவேன் என உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளனாகவும் கூறப்படுகிறது. எனவே ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தது போல்... சிம்புவின் 'மாநாடு' திரைப்படம் திரையரங்கில் வெளியாவது உறுதியாகியுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Karathey Babu Teaser : நான் அரசியலையே தொழிலா பண்றவேன்... கராத்தே பாபு டீசரில் பரபரக்கும் பாலிடிக்ஸ்..!
Actress Shalini : வெள்ளை சுடிதாரில் மனதை ஈர்க்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை ஷாலினி.. அழகிய கிளிக்ஸ்!