Atlee and Rajinikanth : தமிழ் சினிமாவில் இதுவரை பிளாப் படங்கள் கொடுக்காத இயக்குனர்களின் வரிசையில் நிச்சயம் அட்லீ குமாருக்கும் ஒரு இடம் உண்டு. அண்மையில் அவர் இயக்கிய ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு கொடுத்தது.
தமிழில் வெளியான ராஜா ராணி என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கியவர் தான் அட்லீ. அதனைத் தொடர்ந்து தளபதி விஜய் அவர்களை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று வெற்றி திரைப்படங்களை தொடர்ச்சியாக கொடுத்தவர் அவர். இதனைத் தொடர்ந்து இந்த 2023 ஆம் ஆண்டு பாலிவுட்டிற்கு சென்றார் அட்லீ.
பாலிவுட் உலகின் பாஷாவாக விளங்கி வரும் ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் திரைப்படம் சுமார் 1200 கோடி ரூபாயை தாண்டி மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஷாருக்கான் மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவரையும் வைத்து ஒரு திரைப்படத்தை உருவாக்க உள்ளதாகவும் இது தனது அடுத்த திரைப்படமாக இருக்கக்கூட வாய்ப்புகள் இருப்பதாகவும் அண்மையில் ஒரு பேட்டியில் பேசிய அட்லீ தெரிவித்து இருந்தார்.
தலைவர் 171 அப்டேட் வேணுமா..? சரி சொல்றேன் - விழா மேடையில் மனம் திறந்த லோகேஷ் கனகராஜ்!
அதை பேட்டியில் அவர் சூப்பர் ஸ்டார் பற்றிய சில தகவல்களை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அட்லி இயக்குனராக களம் காணுவதற்கு முன்பாக, பிரபல இயக்குனர் சங்கர் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தது அனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக ஷங்கரின் எந்திரன் திரைப்படத்தில் சுமார் 300 நாட்கள் சூப்பர் ஸ்டார் அவர்களுடன் பயணித்திருப்பதாக அட்லீத தெரிவித்துள்ளார்.
Bhumika Chawla: 45 வயதிலும் அதிகாலை ஆதவனை அழகால் மயக்கிய பூமிகா! சேலை அழகில் சுழட்டி போட்ட போட்டோஸ்!
இந்நிலையில் ஏற்கனவே அவரிடம் இரண்டு மூன்று கதைகளை கூறியிருப்பதாகவும், அவரும் தனக்கு ஒரு படம் நடிப்பேன் என்று உறுதி அளித்துள்ளதாகவும் அட்லீ தெரிவித்துள்ளார். ஆனால் கதைக்களத்தை அமைக்க தனக்கு சிறிது காலம் தேவைப்படும் என்றும், அந்த திரைப்படம் பாட்ஷாவிற்கும் ஒரு படி மேல் அமைய வேண்டும் என்று தான் ஆசைப்படுவதாகவும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.