தலைவர் 171 அப்டேட் வேணுமா..? சரி சொல்றேன் - விழா மேடையில் மனம் திறந்த லோகேஷ் கனகராஜ்!
Thalaivar 171 Update : தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவருடைய லியோ திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக மாறிவரும் நிலையில் தனது அடுத்த பட அப்டேட் ஒன்றை தற்பொழுது வெளியிட்டுள்ளார்.
Maanagaram
மாநகரம் என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குனராக களம் இறங்கிய லோகேஷ் கனகராஜ், வெகு சில திரைப்படங்கள் மட்டுமே இயக்கி இருக்கிறார் என்ற பொழுதும் அவை அனைத்துமே, முற்றிலும் மாறுபட்ட கதைகளத்தோடு அமைக்கப்பட்ட திரைப்படங்களாக மாபெரும் வெற்றியை அவருக்கு தேடித்தந்தது.
பைனலில் இந்தியாவுக்குத் தான் வெற்றி! கெத்தாகச் சொல்லும் தலைவர் ரஜினிநாந்த்!
Master
குறிப்பாக கார்த்தி நடிப்பில் வெளியான கைதி, தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் மற்றும் லியோ, உலக நாயகன் நடிப்பில் வெளியான விக்ரம் ஆகிய நான்கு திரைப்படங்களும் லோகேஷ் கனகராஜன் புகழை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்று கூறினால் அது மிகையல்ல. அதிலும் குறிப்பாக தளபதி விஜய் நடிப்பில் அண்மையில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் 28 நாட்களையும் கடந்து நல்ல முறையில் ஓடி வருகிறது.
Kamalhaasan
உலக அளவில் சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் இந்த திரைப்படம் வசூல் சாதனை செய்து பயணித்து வருகிறது. இந்நிலையில் தனது அடுத்த படம் குறித்த தகவலை தற்பொழுது வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். காளிதாஸ் ஜெயராம் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் "அவள் பெயர் ரஜ்னி" என்கின்ற திரைப்பட விழாவில் பங்கேற்று பேசிய லோகேஷ் கனகராஜிடம் "தலைவர் 171" திரைப்படம் குறித்த அப்டேட்களை கேட்டபொழுது.
Thalaivar 171
"2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சூட்டிங் துவங்க உள்ளதாகவும், திரைக்கதையை அடுத்த வாரத்தில் இருந்து தான் அமைக்க இருப்பதாகவும் தகவலை தெரிவித்துள்ளார்". பல கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த திரைப்படமாக இது இருக்கும் என்று ஏற்கனவே இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் தெரிவித்திருந்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 திரைப்படத்திற்கான திரைக்கதையை அடுத்த வாரம் முதல் எழுத உள்ளதாக ஒரு சிறப்பான அப்டேட்டை கொடுத்துள்ளார்.