நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் நிச்சயதார்த்தம் அண்மையில் நடைபெற்ற நிலையில், திருமண பத்திரிக்கையும் ரெடி ஆயிடுச்சு, இடம், தேதி அனைத்தும் சட்டென் அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நெப்போலியன்.
வில்லன், ஹிரோ, குணச்சித்திர நடிகர், அரசியல்வாதி, தொழிலதிபர் என பண்முக திறமை கொண்ட நெப்போலியன், தன் மகனுக்காக, அவரது வாழ்க்கைக்காக அனைத்தையும் விட்டுவிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.
நெப்போலியன்-ஜெயசுதா தம்பதிக்கு தனுஷ் - குணால் என இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் தனுஷ் சிறுவயது முதலே தசை சிதைவு நோயால் அவதிப்பட்டு வரும்நிலையில், அவருக்காக தனி சாம்ராஜ்ஜியத்தையே ஏற்படுத்தியிருக்கிறார் நெப்போலியன். அதிக நாட்கள் உயிர்வாழ மாட்டார் என மருத்துவர்கள் கைவிட்ட போதிலும், மனம்தளராமல் தனுஷை கல்யாண வாழ்க்கை வரை அழைத்து வந்துள்ளார்.
அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்த நிலையில், பலர் விமர்சித்து வந்தாலும் நடிகர் நெப்போலியன் மகனின் திருமண ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
நெப்போலியன் மகன் தனுஷ் திருமண நிச்சயதார்த்த வீடியோ! கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்!
அமெரிக்காவில் வாழ்ந்து வந்தாலும், தமிழையும், தமிழ்நாட்டையும் மறக்க மாட்டேன் மருமகள்தான் வேண்டும் எனக் கூறிய நெப்போலியன், எனது குடும்பத்திற்கு ஒரு தமிழ்நாட்டு மருமகள் தான் சரியாக இருப்பார் என ஆசைப்பட்டேன், அதுபோலவே நடந்து இன்று திருநெல்வேலியைச் சேர்ந்த அக்ஷயா எனக்கு மருமகளாக கிடைத்துள்ளார் என தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவில் வாழ்ந்தாலும் திருநெல்வேலி பெண்ணை மருமகளாக்க என்ன காரணம்? நெப்போலியன் பளீச் பதில்..
25 வயதாகும் தனுஷ் விமானத்தில் பயணிக முடியாது என்பதால் அமெரிக்காவில் அவர் இருக்க, நெப்போலியனும், அவரது மனைவி ஜெயசுதா மற்றும் உறவினர்கள் திருநெல்வேலிக்கு வந்து மணமகள் அக்ஷயா வீட்டில் வீடியோகாலில் நிச்சயதார்த்தத்தை முடித்தனர்.
திருமண நிச்சதார்த்தம் முடிந்த கையோடு, தேதி, இடம் ஆகியவற்றையும் நெப்போலியன் சூடோடு சூடாக அறிவித்துள்ளார். திருமண பத்திரிக்கையும் அழகான பழங்கால ஓலைச்சுவடி வடிவில் நேர்த்தியாக அச்சடிக்கபட்டுள்ளது. தனுஷ்-அக்ஷயா திருமணம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் நவம்பர் மாதம் 7ம் தேதி புதன் கிழமை நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.