Akhanda Collection: 10 நாளில் இத்தனை கோடி வசூலா..? திரையுலகினரை வாயடைக்க செய்த அகண்டா..!

Published : Dec 12, 2021, 06:22 PM IST
Akhanda Collection: 10 நாளில் இத்தனை கோடி வசூலா..? திரையுலகினரை வாயடைக்க செய்த அகண்டா..!

சுருக்கம்

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் (Balakrishna) அதிரடி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'அகாண்டா' (Akhanda collection) படத்தின் 10 நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி ஒட்டுமொத்த திரையுலகினரையும் வாயடைக்க செய்துள்ளது.  

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் அதிரடி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'அகண்டா' படத்தின் 10 நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி ஒட்டுமொத்த திரையுலகினரையும் வாயடைக்க செய்துள்ளது.

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் தனது அதிரடி நடிப்பாலும், மாஸ் டைலாக்குகளாலாலும் தெலுங்கு திரையுலகில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர். அதே நேரத்தில் கொஞ்சம் சர்ச்சையான நடிகராகவும் பார்க்கப்பட்டு வருபவர்.

இவர் நடிப்பில் வெளியான லெஜண்ட் மற்றும் சிம்ஹா ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு  இயக்குனர் போயபதி ஸ்ரீனு மற்றும் நடிகர் பாலகிருஷ்ணா ஆகியோர் மூன்றாவது முறையாக இணைந்து உருவாக்கியுள்ள படம் அகண்டா. மாஸ் படமாக உருவாகியுள்ள  திரைப்படமான இதில் நடிகர் பால கிருஷ்ணா இத்திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். பிரக்யா ஜெய்ஸ்வால் ஐஏஎஸ் அதிகாரி கதாபாத்திரத்திலும், ஜெகபதி பாபு அகோரியாவும் நடித்துள்ளார்.  இவர்களுடன் நந்தமுரி பாலகிருஷ்ணா,  அவினாஷ் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அகண்டா படம் கடந்த டிசம்பர் 2-ம் தேதி வெளியான நிலையில் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் பல பிரபலங்கள் இந்த படத்தை பார்த்து விட்டு ஆஹா... ஓஹோ... என புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். மேலும் ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் இப்படத்தை ரீமேக் செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இப்படம் வெளியான நாள் முதலே தொடர்ந்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கெத்து காட்டி வரும் நிலையில், 'அகண்டா' திரைப்படம் 10 நாட்களில் செய்த வசூல் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது வெறும் பத்து நாட்களில் மட்டுமே 102 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்க்கு பிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதே நேரம், இப்படத்தின் காலெக்ஷன் பற்றி அறிந்த திரையுலகினர் வாயடைத்து போயுள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிரிஷால் முத்து - மீனா இடையே வெடிக்கும் பிரச்சனை; கல்யாணியால் கதிகலங்கி நிற்கும் மனோஜ் - சிறகடிக்க ஆசை
Rajinikanth Net Worth : எளிமையின் சிகரம் ரஜினிகாந்த்... யம்மாடியோ இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?