
ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘சூரரைப்போற்று’ (soorarai pottru). சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா (Suriya), அபர்ணா முரளி, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருந்த இத்திரைப்படம், கடந்தாண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. ஒருவேளை இப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தால் வேற லெவலுக்கு வசூல் சாதனை படைத்திருக்கும் என திரைப்பட விமர்சகர்கள், மற்றும் பத்திரிகையாளர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்திருந்தனர்.
இதனால் இப்படம் தியேட்டரில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக திரையரங்க உரிமையாளர்களோ ஓடிடி-யில் வெளியான படங்களை தியேட்டரில் வெளியிட மாட்டோம் என திட்டவட்டமாக அறிவித்தனர்.
இந்த படத்தை வெளியிட தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் மறுத்தாலும், கேரள திரையரங்கு உரிமையாளர்கள் இப்படத்தை வெளியிட முன்வந்துள்ளனர். அதன்படி சூரரைப் போற்று (soorarai pottru) படத்தின் சிறப்பு காட்சிகள் இன்று திருவனந்தபுரத்தில் உள்ள திரையரங்கில் திரையிடப்பட்டது. கூட்டம் கூட்டமாக வந்து ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.