Vijay : சோஷியல் மீடியா கிங் என நிரூபித்த தளபதி விஜய்.... டோலிவுட் ஹீரோக்களை அடிச்சு தூக்கி முதலிடம் பிடித்தார்

Ganesh A   | Asianet News
Published : Dec 12, 2021, 04:18 PM IST
Vijay : சோஷியல் மீடியா கிங் என நிரூபித்த தளபதி விஜய்.... டோலிவுட் ஹீரோக்களை அடிச்சு தூக்கி முதலிடம் பிடித்தார்

சுருக்கம்

டுவிட்டரில் அதிகம் டுவிட் செய்யப்பட்ட நடிகர்கள் பட்டியலில் கடந்தாண்டு 3-வது இடத்தில் இருந்த நடிகர் விஜய் இந்தாண்டு முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2021-ம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே இருக்கிறது. இதனிடையே தென்னிந்திய அளவில் டுவிட்டரில் அதிகம் டுவிட் செய்யப்பட்ட நடிகர்கள், நடிகைகள், படங்கள் பட்டியலை டுவிட்டர் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி இந்த ஆண்டு அதிகம் டுவிட் செய்யப்பட்ட தென்னிந்திய படங்களின் பட்டியலில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது. அடுத்த இடத்தில் எச்.வினோத் - அஜித் கூட்டணியில் உருவாகி உள்ள ‘வலிமை’ உள்ளது. விஜய் நடித்து வரும் பீஸ்ட் மற்றும் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான ஜெய் பீம் ஆகிய படங்கள் 3 மற்றும் 4ம் இடத்தில் உள்ளன.

இப்படி முதல் 4 இடங்களை கோலிவுட் படங்கள் கைப்பற்றிய நிலையில், டோலிவுட் படங்களான வக்கீல் சாப், ஆர்.ஆர்.ஆர், சர்காரு வாரி பட்டா, புஷ்பா ஆகிய படங்கள் முறைவே 5, 6, 7, 8 ஆகிய இடங்களை பிடித்துள்ளன. சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் 9-வது இடத்திலும், யாஷ் நடித்துள்ள கேஜிஎப் 2 படம் 10-வது இடத்தையும் பிடித்துள்ளது. 

2021-ம் ஆண்டில் அதிகம் டுவிட் செய்யப்பட்ட நடிகர்களின் பட்டியலில் நடிகர் விஜய் முதலிடம் பிடித்துள்ளார். பவர் ஸ்டார் பவன் கல்யாண் இரண்டாவது இடத்திலும், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு 3வது இடத்திலும் உள்ளனர். சூர்யா 4வது இடத்திலும், ஜூனியர் என்டிஆர் 5வது இடத்திலும், அல்லு அர்ஜுன் 6வது இடத்திலும், ரஜினி 7வது இடத்திலும், ராம் சரண் 8வது இடத்திலும், தனுஷ் 9வது இடத்திலும், அஜித் 10வது இடத்திலும் உள்ளனர். கடந்தாண்டு 3-வது இடத்தில் இருந்த நடிகர் விஜய் இந்தாண்டு முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

அரோரா போட்ட கேஸில் ஆடிப்போன பாரு ! அடித்து ஓட விட்ட விக்ரம்!
சூப்பர்ஸ்டாரின் டைம்லெஸ் மாஸ் மூவீஸ் : மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய டாப் 10 ரஜினி படங்கள்