Naga Chaitanya: நாக சைதன்யா பிறந்தநாளை முன்னிட்டு வெளியான 'தண்டேல்' பட ஃபர்ஸ்ட் லுக்!

Published : Nov 22, 2023, 10:19 PM IST
Naga Chaitanya: நாக சைதன்யா பிறந்தநாளை முன்னிட்டு வெளியான 'தண்டேல்' பட ஃபர்ஸ்ட் லுக்!

சுருக்கம்

அல்லு அரவிந்த் வழங்கும், நாக சைதன்யா அக்கினேனி நடிப்பில் உருவாக்கும் 'தண்டேல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.   

'யுவ சாம்ராட்' நாக சைதன்யா மற்றும் இயக்குநர் சந்து மொண்டேட்டி இணைந்து பணியாற்றும் #NC23 எனும் திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அல்லு அரவிந்த் வழங்க, தயாரிப்பாளர் பன்னி வாசு தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் டிசம்பரில் தொடங்குகிறது.

நாக சைதன்யா நடிப்பில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். அதே தருணத்தில், இயக்குநர் சந்து மொண்டேட்டி, 'கார்த்திகேயா 2' படத்தின் மூலம் பான் இந்திய பிளாக் பஸ்டரை வழங்கியவர். மேலும் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் பல வெற்றிகளை வழங்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இதுவரை கண்டிராத தோற்றத்தில் நடிக்கும் நாக சைதன்யாவிற்கு இந்தத் திரைப்படம், இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்ட பொருட்செலவில் ததயாராக உள்ளது.

Keerthy Suresh: நடு ரோட்டில் ... கீர்த்தி சுரேஷிடம் பாலியல் சீண்டல்..! நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்!

நடிகர் நாக சைதன்யா தனது பிறந்த நாளை நாளை கொண்டாடுகிறார். இருப்பினும் அவரது பிறந்த நாளுக்காக ஒரு நாள் முன் தயாரிப்பாளர்கள் அவருடைய ரசிகர்களுக்கு பெரிய பரிசினை வழங்கி இருக்கிறார்கள். அவர் தற்போது நடித்து வரும் படத்திற்கு 'தண்டேல்' எனும் ஆற்றல் மிக்க தலைப்பினை அறிவித்துள்ளனர். அதனுடன் ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டிருக்கிறார்கள். தண்டேல் என்றால் ஆற்றல் மிக்கவர்... கவர்ச்சியானவர்... லட்சியத்தையும், கவனத்தையும் கொண்டவர்... ஒருவருக்கு ஏதாவது ஒரு உண்மையான ஆசை இருந்தால் அதற்காக அனைத்தையும் கொடுக்க முடியும் எனப் பொருள் கொள்ளலாம். 

மகள் கார்த்திகாவுக்கு கிலோ கணக்கில் நகைகளை போட்டு திருமணம் செய்த.. நடிகை ராதா Net Worth எவ்வளவு தெரியுமா

நாக சைதன்யா இந்த திரைப்படத்தில் மீனவராக நடிக்கிறார்.‌ இந்த தோற்றத்திற்காக கடந்த சில மாதங்களாக தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டார். ஃபர்ஸ்ட் லுக்கில் அவர் நீண்ட முடி மற்றும் தாடி உடன் முரட்டுத்தனமான தோற்றத்தில் உள்ளார். கையில் துடுப்புடன் ஒரு படகில் அமர்ந்திருக்கும் நாக சைதன்யா- வேட்டி அணிந்து, தனது செதுக்கப்பட்ட உடலமைப்பை கதாபாத்திர தோற்றத்திற்காக தீவிரமாக பார்ப்பது போல் தோன்றுகிறார்.‌ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் - படத்தின் தலைப்பை போல் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். மேலும்  இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் தொடங்கவில்லை என்றாலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

 

 

இப்படத்தின் கதை உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும் படப்பிடிப்பு பெரும்பாலும் அசலான இடங்களில் நடைபெறுகிறது. இந்த திரைப்படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார். சூப்பர் ஹிட்டான 'லவ் ஸ்டோரி'க்குப் பிறகு இருவரும் இணைந்துள்ள இரண்டாவது படம் இது. 'தண்டேல்' என்பது முற்றிலும் மாறுபட்ட பின்னணியைக் கொண்ட காதல் கதை. இப்படத்தின் கதையில் இசைக்கு நல்ல வாய்ப்பு இருப்பதால் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த காதல் கதைக்காக பிரத்யேகமாக இசையமைக்கிறார். ஷாம் தத் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ஸ்ரீ நாகேந்திர தாங்கலா கலை இயக்கத்தை கவனிக்கிறார். படப்பிடிப்பிற்கு முன்னதான பணிகளில் படக் குழு போதுமான நேரத்தை செலவிட்டுள்ளதால்..இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!