
நடிகர் சங்கம் சார்பாக காவிரி மேலாண்மை அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடக் கோரியும் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஒட்டு மொத்த நடிகர் நடிகைகள், தயாரிப்பாளர்கள், மற்றும் திரையுலகை சேர்ந்த துணை நடிகர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்ட மௌன அறவழி போராட்டம் நடைப்பெற்றது.
இந்த போராட்டத்தில் தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களான, ரஜினி, கமல், விஜய், சூர்யா, தனுஷ் உட்பட பலர் கலந்துக்கொண்டு விவாசாயதை காப்பாற்ற தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
கிட்டதட்ட 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலர் கலந்துக்கொண்ட இந்த அறவழி மௌன போராட்டம் சரியாக காலை 9பது மணியளவில் துவங்கியது. போராட்டம் தொடங்கியது முதல் ஒவ்வொரு நடிகர்களும் வர துவங்கினர்.
பல பிரபலங்கள் கலந்துக்கொண்ட இந்த போராட்டம் சரியாக 1 மணியளவில் முடிவடைந்தது. ஆனால் விஜய், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் போராட்டம் முடிவதற்கு முன்பே ஒரு சில காரணங்களால் போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து கிளம்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.