
நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்ய வேண்டும் பிரபல நடிகர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு, கடந்த 23ஆம் தேதி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தேர்தல் நடைபெற்றது. இதில் 50 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. வாக்குகள் இன்னும் என்ன படாததால், இதுவரை தேர்தல் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
இந்நிலையில் நடந்து முடிந்த, நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று விஜய் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ள துணை நடிகர் பெஞ்சமின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தும் கடந்த 23ஆம் தேதி நடந்து முடிந்த நடிகர் சங்க தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊரான சேலத்தில் இருந்து வந்தேன். ஆனால் தன்னை மட்டுமின்றி பலரை நடிகர் அதிகாரிகள் வாக்களிக்க விடவில்லை. தபால் ஓட்டுகள் 22ஆம் தேதி வரை தங்களுடைய கைக்குக் கிடைக்கவில்லை. இதனால் இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும் ஏற்கனவே பதிவு துறை ஐஜி, சங்க பதிவாளருக்கு மனு கொடுத்தும் அது பரிசீலிக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார். இந்த மனு நாளை ஜூலை 8 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.