
ஜூன் 23 மூன்றாம் தேதி துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில், தற்போது வரை இரண்டு வாரங்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. முதல் வாரமான கடந்த வாரம், இது வரை பிக்பாஸ் வீட்டில் இருந்து எந்த பிரபலமும் வெளியேற்ற படவில்லை.
ஆனால் இரண்டாவது வாரத்தின் கடைசி நாள் ஆன இன்று, கண்டிப்பாக பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒரு பிரபலம் வெளியேற்றப்படுவார் என்பது நாம் அறிந்தது தான்.
இந்த வாரம் ஏவிக்ஷன் பட்டியலில், மீரா, மது, சேரன் ,சரவணன்,கவின்,சாக்ஷி, பார்த்திமா பாபு ஆகிய 7 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் மதுமிதா மக்கள் அளித்த ஓட்டுகள் அடிப்படையில் ஏவிக்ஷன் பட்டியலில் இருந்து காப்பாற்ற பட்டு விட்டதாக நேற்று கமல் அறிவித்தார்.
இதை தொடந்து, தற்போது மீதம் உள்ள 6 பேரில் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்கிற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருந்து வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு பாத்திமா பாபு வெளியேற வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.