Naai Sekar Returns: வடிவேலுவின் நாய் சேகர் Returns படத்தின் போட்டோ லீக்...வைகை புயலுடன் இருக்கும் சிவாங்கி...

By Anu Kan  |  First Published Apr 10, 2022, 9:48 AM IST

Naai Sekar Returns: வடிவேலு, நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்து வரும் நாய் சேகர் Returns படத்தின், புகைப்படம் படப்பிடிப்பில் இருந்து கசிந்துள்ளது. 


வடிவேலு, நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்து வரும் நாய் சேகர் Returns படத்தின், புகைப்படம் படப்பிடிப்பில் இருந்து கசிந்துள்ளது. தமிழ் திரையுலகில், நீண்ட இடைவெளிக்குபிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகர் வடிவேலு. இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் பி ரம்மாண்டமாக எடுக்கப்படும் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார். 

வடிவேலுவின் நாய் சேகர் Returns:

Tap to resize

Latest Videos

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும், இந்த படத்தின் நாய்களுடன் வடிவேலு செம்ம கெத்தாக அமர்ந்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தியில் வெளியாகியிருந்தது. ஏற்கனவே, சதிஷ் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு ‘நாய் சேகர்’ என்று தலைப்பிட்டுள்ளதால் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்று வடிவேலு படத்திற்கு தலைப்பிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

undefined

வடிவேலுவுடன், ஷிவாங்கி:

இதையடுத்து, இதன் படப்பிடிப்பு பணிகள் துவங்கி விறுவிறுப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. வைகைபுயலின் ரீ என்ட்ரியால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இதில் ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். படத்தின் 2 ம் கட்ட படப்பிடிப்பு மைசூரில் முடிவடைந்த நிலையில், 3 ஆம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்று கசிந்துள்ளது. இந்த புகைப்படத்தில் டாக்டர், பீஸ்ட் பட காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஷிவாங்கி மற்றும் வடிவேலு ஆகியோர் உள்ளனர். தற்போது அந்த புகைப்படம் வேகமாக பரவி வருகிறது. 

வடிவேலுவின் இடைவெளிக்கு என்ன காரணம்?

இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி திரைப்படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றியடைந்தது. இதன் இரண்டாம் பாகத்தில் ஆரம்பித்த பிரச்சனையால், நடிகர் வடிவேலுவிற்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கக்கூடாது என்று, ரெட் கார்ட் தரப்பட்டது. தற்போது பிரச்சனை முடிவுக்கு வந்துள்ள நிலையில், வடிவேலு ரீ என்ட்ரி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க ....தலைவர் 169 படம் கைநழுவியதால் ரூட்டை மாற்றிய கார்த்திக் சுப்புராஜ்... புது கூட்டணியில் தயாராகிறது ஜிகர்தண்டா 2

click me!